”ஜிமிக்கி கம்மல் டான்ஸர்ஸைவிட தமிழ்நாட்டு பொண்ணுங்க ஸ்மார்ட்!”- ‘கலக்கப் போவது யாரு’ ஜாக்குலின்

0
2372
Jacqueline
- Advertisement -

விஜய் டி.வியின் ‘கலக்கப்போவது யாரு?’ காமெடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஜாக்குலின். தற்போது, நயன்தாராவின் தங்கச்சியாக ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்துவருகிறார். அவரிடம் முதலில் கேட்ட கேள்விக்கே ‘பக பக’ எனச் சிரித்தவாறு பேச ஆரம்பிக்கிறார்…
Jacqueline
”என்ன ஆச்சு, டி.வி நிகழ்ச்சிகளில் ஆளையே காணோமே?’

-விளம்பரம்-

”அச்சச்சோ கொளுத்திப் போட்டுடாதீங்க. நான் எங்கேயும் போயிடலை. ‘கலக்கப்போவது யாரு?’ சீசன் 7 ஆரம்பிக்கப் போறாங்க. அதுக்கும் நான்தான் ஆங்கரிங். இந்த நேரத்தில் எதையாவது சொல்லி விட்டுடாதீங்க. நிச்சயமா என்னை ஆங்கராகப் பார்ப்பீங்க”

- Advertisement -

” ‘கலக்கப்போவது யாரு? சீசன் 7’ எப்போ ஆரம்பமாகுது?”

”அடுத்த மாசம் ஆரம்பிக்கிறதா சொல்லியிருக்காங்க. அதுக்கான ஆடிஷனுக்கும் போனேன். செலக்‌ஷன் எல்லாம் முடிஞ்சதும் ஆரம்பிப்பாங்க.”

”உங்க ஷோக்களிலும் நீங்க ஜிமிக்கி கம்மல் போட்டுட்டு வந்திருக்கீங்களே.. ஜிமிக்கி கம்மல் வீடியோ பார்த்தீங்களா?”

-விளம்பரம்-

”எனக்கு அதைப் பார்க்கணும்னு தோணலை. என் ஃபிரெண்ட்ஸ் எல்லாருமே ‘ஜிமிக்கி கம்மல் டான்ஸ் வீடியோ பார்த்தியா?’னு அடிக்கடி கேட்டாங்க. அதுக்கப்புறம்தான், இந்த வீடியோவில் வைரலாகுறதுக்கு என்ன இருக்குன்னு பார்ந்தேன். அழகானப் பொண்ணுங்க டான்ஸ் ஆடியிருக்காங்க. அதுதான் இவ்வளவு வைரல்!”

Sheril
”ஜிமிக்கி கம்மல் வீடியோவைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோணுச்சு?”

”இவங்களைவிட அழகானப் பொண்ணுங்களே இல்லாமலானு தோணுச்சு. நம்ம ஊரிலும் எவ்வளவோ அழகானப் பொண்ணுங்க இருக்காங்க. அவங்களைவிட தமிழ்நாட்டு பொண்ணுங்க ஸ்மார்ட். அதனால், இது எனக்குப் பெரிய விஷயமா தெரியலை.”

” ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா தங்கையாக நடிச்ச அனுபவம் பற்றி…”

”ஃபிரெண்ட்ஸ் நடுவில் ஏதாவது பேச்சு வந்தால், ‘ஆமா, இவ பெரிய நயன்தாரா தங்கச்சி’னு கலாய்க்கறதுண்டு. அதேமாதிரி ஆண்களைப் பற்றி சொல்லும்போது, ‘பெரிய அரவிந்த்சாமி நினைப்பா?’னு சொல்வாங்க. நான் இப்போ, ‘ஆமா, நான் நயன்தாரா தங்கச்சிதான்’னு தாராளமாச் சொல்லிக்கலாம். கதைப்படி நயன்தாரா தங்கச்சியாக இருக்கிறதால், எப்பவுமே ரெண்டுப் பேரும் ஒண்ணாதான் இருப்போம்.”

”ஷூட்டிங் ஸ்பாட்ல நீங்களும் நயன்தாராவும் பகிர்ந்துகிட்ட விஷயம்…”

”நிறைய விஷயம் பேசியிருக்கோம். அந்தப் படத்தைப் பற்றி மட்டுமில்லாமல், என் பர்சனல் லைஃப் பற்றியும் பேசியிருக்கோம். இப்படியெல்லாம் இருக்கலாம் என சில விஷயங்களைச் சொல்வாங்க. நயன்தாரா சொல்லும்போது கேட்காமல் இருக்க முடியுமா? இதுக்கு முன்னாடியே நான் நயன்தாராவின் ரசிகை. செம்ம கேரக்டருங்க!”

Jacqueline

‘நயன்தாராவை அக்கானு கூப்பிடுவீங்கன்னு கேள்விப்பட்டோமே…”

”ஐய்யோ… நீங்க வேற! அவங்களை நேரில் பார்க்கும் யாருக்கும் அக்கானும் கூப்பிட மனசு வராது. நிஜமா சொல்லணும்னா, அவங்கதான் என் தங்கச்சி மாதிரி இருப்பாங்க. படத்துக்காக மட்டுமே ‘அக்கா’னு கூப்பிடுவேன். மற்ற நேரங்களில் நயன் மேம்தான்.”

இதையும் படிங்க: நயத்தரவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் ரகசிய திருமணம் முடிந்ததா?

”எப்போ உங்களை சீரியல்களில் பார்க்கலாம்?”

”ஏங்க இந்த கொலைவெறி? எனக்கு இப்போதான் இருபது வயசு ஆகுது. இன்னும் கத்துக்க, தெரிஞ்சுக்க எவ்வளவோ இருக்கு. அதுக்குள்ளே சீரியலுக்குள் சிக்கிக்க விரும்பலை. இப்போதைக்கு ஆங்கரிங் மற்றும் படங்களில்தான் என் கவனம் இருக்கு. அதற்காக, சீரியல் பிடிக்காதுனு இல்லை. சீரியலில் பல நாள்கள் தொடர்ந்து நடிக்கவேண்டியிருக்கும். மற்ற எந்த வாய்ப்புகளுக்கும் ஓ.கே சொல்ல முடியாது. தவிர, சீரியல்ல சில நேரம் ஓவர் ஆக்டிங் இருக்கும். சினிமாவில் அப்படி இருக்காது.”

Jacqueline

”அதெப்படி உங்களை எப்படி கலாய்ச்சாலும் சிரிச்சுட்டே சமாளிக்கிறீங்க?”

”ஆங்கரிங் என்று வரும்போது ஒருநாள் முழுக்க இருந்தே ஆகணும். அப்போ, எப்படியும் நம்ம ஒரிஜினல் கேரக்டர் தெரிஞ்சுடும். என் ஒரிஜினல் கேரக்டர் எப்பவும் ஜாலியாக இருக்கிறது. எவ்வளவு கலாய்ச்சாலும் சிரிச்சுட்டே இருப்பேன். கலாய்க்கிற இடத்தைப் பொருத்தும் சில நேரம் பேச வேண்டியிருக்கும். அந்த இடத்தில் பேசணும்னு இருந்தா கண்டிப்பாக பேசிடுவேன். காமெடி ஷோ என்பதால், மக்களைச் சிரிக்கவைக்கும் கடமை நமக்கு இருக்கு. அது எப்பவும் என் மனசுல இருக்கும்.”

Advertisement