சொந்த ஊரில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் ஒதுக்கப்பட்ட அனுபவம் குறித்து ரஞ்சித்

0
160
- Advertisement -

ஜாதி குறித்து எமோஷனலாக பா. ரஞ்சித் கூறியிருக்கும் தகவல்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பிகே திரைப்பட விழா குறித்த செய்திகள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழா கடந்த 5ம் தேதி தொடங்கி சமீபத்தில் தான் நிறைவடைந்து இருக்கிறது. இந்த விழாவில் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலந்து இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக வேர்ச்சொல் தலித் இலக்கிய கூடுகை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா ரஞ்சித் அவர்கள் தன்னுடைய சிறுவயதில் நடந்த தீண்டாமையை குறித்து கூறியது, என்னுடைய சொந்த ஊரில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மிகக் கோலாலமாக நடைபெறும்.

- Advertisement -

தீண்டாமை குறித்து சொன்னது:

அந்த ஊரில் நாங்கள் 50 குடும்பங்கள் இருக்கிறோம். ஒரு சிறிய காலணியை சேர்ந்தவர்கள். நாங்கள் தலித் என்பதால் அந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது. நாங்கள் மேளம் அடிக்கலாம் ஆனால் கோயிலில் உள்ளே செல்ல முடியாது. ஒரு கயிறு கட்டி வைத்திருப்பார்கள். ரொம்ப கோலாகலமாக தீமிதி விழாவும் நடக்கும். அந்த இடத்திலிருந்து தான் பார்க்க வேண்டுமே தவிர எந்த ஒரு கொண்டாட்டத்திலோ அல்லது பூஜையிலையோ நாங்கள் கலந்து கொள்ள முடியாது.

ரஞ்சித் செய்த வேலை:

இந்த தீண்டாமை எனக்கு பிடிக்காததால் தான் நான் திருவிழாவிலேயே கலந்து கொள்ள மாட்டேன். ஆனால், நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது எனக்கும் தீ மிதிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதனால் எனக்கு மிகவும் பிடித்த கங்கையம்மன் கோவிலில் காப்பு கட்டி தீ மிதிக்கலாம் என்று நான் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து முடிவு எடுத்து நாங்களே ஒரு மஞ்ச கயிறை கட்டிக்கொண்டோம். இது தெரிந்து எங்கள் காலணியை சேர்ந்த சில பேர் வந்து சேர்ந்து கொண்டார்கள். 10 பேர் சேர்ந்ததால் வீடு வீடாக போய் அரிசி எல்லாம் வாங்கி வருவோம்.

-விளம்பரம்-

ஊர் திருவிழா குறித்து சொன்னது:

இதை பார்த்த அந்த காலனியில் இருந்தவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள பசங்களை எல்லாம் காப்பு கட்டிக்கொள்ள சொன்னார்கள். சில பெரியவர்கள் கூட வந்து காப்பு கட்டிக் கொண்டார்கள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த குரூப் பெரிதானது. நாங்கள் விளையாட்டாக செய்தது ஒரு சடங்காக மாறியது. பொது இடம் என்பதற்கான ஒரு மரத்தை கூட வெட்ட விடமாட்டார்கள். ஆனால், அந்த சடங்கு சமயத்தில் தீ மிதிக்க எல்லா மரத்தையும் வெட்டினோம். ஆனால், யாருமே எதுவும் சொல்லவில்லை. மூன்று நாட்களும் வீட்டுக்கு போக கூடாது என்று சொல்லி எங்களுக்கு சாப்பாடு எல்லாம் சமைத்து எடுத்து வந்து கொடுத்தார்கள்.

தலித் வாழ்கை குறித்து சொன்னது:

ரொம்ப சந்தோசமாக நாங்கள் கொண்டாட்டமாக இருந்தோம். என்னுடைய அம்மா எனக்கு வீட்டில் இருக்கும் நகையெல்லாம் எடுத்து வந்து அலங்காரம் செய்து விட்டார். எல்லோரும் கோஷம் போட்டு, மேளம் அடித்து சத்தம் போட்டது எங்களுக்கு வைப்ரேஷனை கொடுத்தது. அனைவரும் ஒருமுறைதான் தீமிதிப்பார்கள் ஆனால் நான் அந்த சந்தோஷத்தில் மூன்று முறை சுத்தி சுத்தி வந்து தீ மிதித்தேன். ஊரில் தீ மிதிக்க ஒரு கதை இருக்கு . அதேபோல் காலனியில் தீ மிதித்தது ஒரு கதை இருக்கு. எங்களுடைய காலனியில் நான் ஒரு கதையை உருவாக்கி நானாக தீ மிதிக்கும் போது ஒரு தலித் லைப்பில் ஒரு கதையை உங்களால் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் சாதி நிரம்பி கிடைக்கிறது. ஒரு பொதுவில் இருக்கும் நிலம், மரம், கடவுள் வரை உனக்கு கிடையாது என்று சொல்லும் போது அதை எதிர்த்து நான் ஒரு வாழ்க்கையை உருவாக்கினேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement