பா.ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி முறிவு – என்ன காரணம் தெரியுமா ?

0
3296
ranjith
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு படத்திற்கு இசை என்பது மிகவும் முக்கியம். அதிலும் ஒரு சில இயக்குனர்கள் தங்கள் படங்களில் இவர் தான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பார்கள். மிஸ்கின் – இளையராஜா, தனுஷ் – அனிருத், சுந்தர் சி – ஆதி என்று பலர் கூட்டணிகளை இதற்கு உதாரணம் சொல்லலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் ரஞ்சித் – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணையும் ஒரு வெற்றிகரமான கூட்டணியாக தான் திகழ்ந்து வருகிறது.

-விளம்பரம்-

ரஞ்சித்தின் படங்களில் பாடல்களும் நிச்சயம் ஹிட் அடித்து விடும் அதற்கு முக்கிய காரணமே சந்தோஷ் நாராயணனின் இசை தான். ரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டகத்தி முதல் அதன் பின்னர் அவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, இறுதியாக வெளியான சார்பட்டா பரம்பரை வரை ரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : தன்னுடைய உடலை கேலி செய்த நெட்டிசன்களுக்கு, பேண்டை கழட்டி பாலாஜி கொடுத்த பதிலடியை பாருங்க.

இப்படி ஒரு நிலையில் இந்த வெற்றி கூட்டணி பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுளள்ளது. சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இசை அமைத்த எஞ்சாயி எஞ்சாமி பாடலின் மூலம் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பிரபல ராப் பாடகர் அறிவுடன் இணைந்து எஞ்சாயி எஞ்சாமி பாடலை தீ எழுதி பாடியிருந்தாலும் அப்பாடலின் விளம்பரத்திலும் வெற்றியிலும் அறிவு ஓரம் கட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பா. ரஞ்சித் டிவீட் செய்தது மேலும் பரபரப்பை கூட்டியது. இதன் காரணமாக பா. ரஞ்சித் அடுத்து இயக்கும் நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தில் சந்தோஷ் நாராயணன் பணியாற்றவில்லை என்றும் வேறொரு இசையமைப்பாளரை தேடி வருவதாகவும் படக்குழு கூறியுள்ளது.

Advertisement