ஸ்வீட்டி, குயூட்டி, குயூட்டி இதில் எல்லாம் ‘ஈட்டி ‘ய குறிக்குது – அரபிக் குத்து பாடல் குறித்து சர்ச்சையை கிளப்பிய பாரி சாலன்.

0
1297
- Advertisement -

தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் அரபிக்குத்து பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். மேலும், இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் இந்த பாடல் வெளியாகி 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்க இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

வைரலாகும் அரபிக்குத்து பாடல்:

மேலும், கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என பட்டி தொட்டி எங்கும் அரபி குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரபி குத்து பாடலை விமர்சித்து பாரிசாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் அரபிக்குத்து பாடலின் மறைமுக அர்த்தம் பற்றியும், பீஸ்ட் படத்தில் உள்ள மறைமுக குறியீடுகள் பற்றியும் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பீஸ்ட் படத்தில் அரபி குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதவில்லை. வேறு ஒருவர் எழுதிய பாடலில் தான் அவருடைய பாடல் என்று பெயர் போட்டு இருக்கிறார்கள்.

அரபிக்குத்து பாடலை விமர்சித்த பாரிசாலன்:

அதற்கு அவரும் ஒத்துக் கொண்டார். இதுதான் உண்மை. இந்த பாடலை பற்றி பார்த்தோம் என்றால், கியூட்டி, பியூட்டி ஸ்வீட்டி என்று வருகிறது. இது ரைமிங்காக வைத்தார்கள். ஆனால், கியூட்டி பியூட்டி ஸ்வீட்டி என்று ஈட்டியில் முடிக்கிறது. இதற்கு இன்னொரு வார்த்தையும் வரும் ஈட்டி. கியூட்டி பியூட்டி ஸ்வீட்டி அதில் மாட்டி என்று சொல்லி மாற்ற முடியாது. ஆனால், ஈட்டி என்றால் மாற்ற முடியும். ஈட்டியில் மாட்டி என்பதுதான் இவர்கள் மறைமுகமாக கியூட்டி பியூட்டி ஸ்வீட்டி , அதில் மாட்டி, மெல்லமா மெல்லமா காலி என்று சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

அரபிக்குத்து பாடலுக்கு பின் உள்ள அர்த்தம்:

அதோடு இந்த வரிகளை பாடும்போது பின்னாடியில் டான்ஸ் ஆடுவார்கள் ரொம்ப வித்தியாசமான செட்ப்களை போட்டிருக்கிறார்கள். இதை நகைச்சுவையான மனநிலையில் ஆடி இருப்பார்கள். ஆனால், அது அதற்கான அர்த்தம் கிடையாது. உண்மை என்னவென்றால், சமண கழுவேற்றியது தான் அவர்கள் அப்படி காண்பிக்கிறார்கள். கழு என்பது ஒரு வகையான ஊசி மரம் கல். அது ஒரு வகையான ஈட்டி. அந்த காலத்தில் சித்தர்களை கழு மரத்தில் ஏற்றி ஆசனவாயில் உட்கார வைத்து அவர்கள் ரத்தப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதையை அனுபவித்து இறப்பார்கள். அதனால் தான் சித்தர்கள்.

வரலாற்றில் மறைக்கப்பட்ட கதை:

இதை வரலாற்றில் மறைத்து விட்டார்கள். இது தமிழர்களுடைய கழுவேற்றம். அந்த காலத்தில் யூதர்கள் ஆட்சியில் இருந்த சித்தர்களை துடிக்க துடிக்க கழுவேற்றிக் கொன்ற நிகழ்வுதான் இந்த கழுவேற்றம். அது இன்னைக்கு வரைக்கும் அவர்கள் மறக்கவில்லை. அது தான் இந்த பாடல் உடைய அர்த்தம். அவர்கள் நம்பளையும் ஆட வைக்கிறார்கள். இதை பலரும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement