என்னது பாவம் கணேசன் சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகிடுச்சா. அவர் கணவர் யார் தெரியுமா ?

0
1442
PavamGanesan
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பல்வேறு திருப்பங்களுடன் சென்றிருக்கும் தொடர் தான் பாவம் கணேசன். இந்த தொடரில் குணவதி கதாபாத்திரத்தில் நடிகை நேகா கவுடா நடித்து வருகிறார். மேலும், பாவம் கணேசன் சீரியலில் குணா 15 வருடங்களாக கணேசனை காதலித்து வந்தார். இந்த விஷயம் சில நாட்களுக்கு முன்பு தான் கணேசனுக்கு தெரிகிறது. இந்த சமயத்தில் குணவதிக்கும், கணேசனின் அம்மாவுக்கு மிகப்பெரிய சண்டை வெடிக்கிறது. பின் கடைசியில் குணவதியை கணேசன் கல்யாணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
பாவம் கணேசன் குணவதி

இப்படி பல திருப்பங்களுடன் பாவம் கணேசன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இப்படி சீரியலில் மட்டுமில்லாமல் இவர் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் ஆனவர். இவருடைய உண்மையான காதல் கதை சீரியலை விட பயங்கர சுவாரசியம் என்று சொல்லலாம். நேகா பெங்களூரை சேர்ந்தவர். இவருடைய அப்பா கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் கமலஹாசனுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.

- Advertisement -

நேகா அவர்கள் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட சீரியல் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி நேகா பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் 2018ஆம் ஆண்டு சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணம். இவர்களுடைய காதல் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கியது. பின் ஸ்கூல், காலேஜ் என்று தொடங்கிய இவர்கள் காதல் இறுதியில் கல்யாணத்தில் முடிந்தது. அதுமட்டுமில்லாமல் நேகாவின் கணவர் சந்தன் ப்ரீகேஜ் படிக்கும்போது நேகாவுக்கு லவ் ப்ரொபோஸ் செய்தாராம்.

அதன்பின் பத்தாவது படிக்கும்போது மறுபடியும் லவ் ப்ரொபோஸ் செய்திருக்கிறார். இப்படி தான் இவர்களுடைய காதல் தொடங்கியது. மேலும், இந்த தகவலை நேகா மற்றும் சந்தன் இருவரும் பிரபல கன்னட ரியாலிட்டி ஷோவில் கூறியிருந்தார்கள். திருமணத்திற்கு பிறகும் கணவரின் சம்மதத்துடன் நேகா நடிப்பைத் தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கன்னட கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி ரியாலிட்டி ஷோவில் இருவரும் பைனலிஸ்ட் ஆக தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement