தன் இறுதி சடங்கு நடந்த இடத்திலேயே இறுதியாக படக்குழுவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ள லட்சுமி அம்மா.

0
3003
pandian

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் ஒரு முக்கிய இடத்தில் உள்ளது என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இந்த சீரியல் முழுக்க முழுக்க அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்ட கதை ஆகும்.

மேலும், இதில் அண்ணன், தம்பிகள் அனைவரும் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். மூர்த்தி என்பவர் தான் குடும்பத்திற்கு பெரிய அண்ணன். மூர்த்தி மற்றும் அவர்களின் சகோதர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தவர் தான் லக்ஷ்மி அம்மாள். தற்போது இந்த சீரியலில் லட்சுமி அம்மாள் இறப்பது போன்ற காட்சி காட்டப் பட்டுள்ளது.

இதையும் பாருங்க : என் முகத்தில் இருந்த பருவுக்கு இதான் காரணம், அதான் உடலையும் குறைத்தேன். லாஸ்லியாக்கு இப்படி ஒரு பிரச்சனையா.

- Advertisement -

இதனால் ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் உறைந்து போயுள்ளது. மேலும், கடைசி தம்பியான கண்ணன் வெளியூரிலிருந்து திரும்பி வருவதற்கு முன்பே தன்னுடைய அம்மாவை எரித்து விடுகிறார்கள். இதைப் பார்த்து கதறி அழும் கண்ணனின் காட்சி பார்ப்போரை அழ வைத்துள்ளது. அதோடு இந்த சீரியல் தினம் தினம் பல விறுவிறுப்பான காட்சிகள் தந்து வருகிறது.

Gallery

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனது கடைசி காட்சியை நடித்த லட்சுமி அம்மாள் அவர்கள் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒட்டுமொத்த குழுவுடன் சேர்ந்து போட்டோ எடுத்து உள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஏன் உங்களுடைய கதாபாத்திரத்தை முடித்து விட்டார்கள் என்று பல கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement