பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர்!! முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.!

0
18391
mullai
- Advertisement -

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார்.இதற்கு முன்னால் சித்ரா பல தொடர்களில் நடித்து உள்ளார்.ஆனால் அது எல்லாம் சின்ன சின்ன கதாபாத்திரம் தான்.தற்போது தான் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ஹீரோயின் கதாபாத்திரம் கிடைத்தது.அதன்முலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் ,அன்பையும் பெற்று உள்ளார்.மேலும்,”முல்லை சித்ரா” என்ற குரூப் ஒன்றை ஓபன் செய்து ரசிகர்கள் சித்ரா குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் இவருக்கு வெள்ளித்திரையில் அதாவது சினிமா துறையில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

-விளம்பரம்-
Image result for pandian stores mullai

இப்போதெல்லாம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமாகவர்கள் தான் அதிகம். அந்த வகையில் பார்த்தால் அதுவும் விஜய் டிவியில் இருந்து நேரடியாக சினிமாத்துறைக்கு செல்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம் ,பல காமெடி நடிகர்கள் என பல பேர் விஜய் டிவியில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்துக் கொண்டு புகழ் பெற்று உள்ளனர். அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த சித்ராவுக்கும் தற்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

இதையும் பாருங்க : அபிராமி ஆர்மியை நேரடியாக கலாய்த்த சாக்க்ஷி.! என்ன காரணம் பாருங்க.!

- Advertisement -

இது குறித்து சினிமா துறையினர் சித்ராவிடம் படம் நடிக்க கேட்டபோது அவர் சரி என்று ஒத்துக் கொண்டார். இதுகுறித்து சித்ரா கூறியது, எனக்கு இப்பதான் “கால்ஸ் ” என்ற படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறினார். மேலும் இந்த படத்தில் தேவதர்ஷினி, வினோதினி ஆகியோர்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு நல்ல த்ரில்லர் மற்றும் நிறைய டுவிஸ்ட் கதை கொண்ட படம் ஆகும்.இந்த படம் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும் என்று கூறினார். இந்த படத்தில் எனக்கு சோலோ ஹீரோயினியாக நடித்துள்ளேன். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் தஞ்சாவூரில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளதாக கூறினார். தற்போதெல்லாம் வெள்ளித் திரையில் நடிக்க வேண்டுமென்றால் முதலில் சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர்களை தான் வெள்ளித்திரைக்கு கொண்டு செல்கிறார்கள் என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Image result for pandian stores mullai

அதனால் எல்லோரும் முதலில் சின்னத்திரையில் தொடர்களில் நடித்ததன் மூலம் சினிமா துறைக்கு வந்துள்ளார்கள் என்று இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதன் வரிசையில் இப்போது சித்ராவும் உள்ளார். சித்ரா மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை கடந்து இந்த நிலைக்கு வந்துள்ளார். இவர் சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல், நடனம், காமெடி என பல திறமைகளை கொண்டுள்ளார்.இவரின் வாழ்நாளில் கஷ்டப்பட்டதன் விளைவாகத்தான் இந்த ஆஃபர் கிடைத்தது என்று சித்ரா பேன்ஸ் கூறிவருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement