போர் தொழில் அளவிற்கு இருந்ததா பரம்பொருள் – சரத்குமார் போலீசாக மிரட்டி இருக்கும் ‘பரம்பொருள் ‘ எப்படி ? விமர்சனம் இதோ.

0
1511
Paramporul
- Advertisement -

போர் தொழில் படத்தை எடுத்து இயக்குனர் அரவிந்த் ராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரம்பொருள். இந்த படத்தில் சரத்குமார், அமிதாஸ் பிரதான், காஷ்மிரா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்பு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் பரம்பொருள் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை
பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹீரோ அமிதாஸ் ஒரு எளிமையான குடும்பத்தை சேர்ந்தவன். இவருடைய தங்கையின் மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இதனால் இவர் திருடன் ஆகிறார். இன்னொரு பக்கம் சரத்குமார் போலீசாக இருக்கிறார். இருந்தாலும் இவர் மோசமான போலீஸ் என்று சொல்லலாம். இவர் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தவறான வழிகளில் பணத்தை சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் சரத்குமார் பெயர் சொல்வதைக் கேட்கும் நிலைமைக்கு ஹீரோ வருகிறார்.

- Advertisement -

அப்போது ஆயிரம் ஆண்டு பழமையான சிலை ஒன்று இவர்களுக்கு கிடைக்கிறது. அதை விற்கும் பொறுப்பை ஆதியிடம் சரத்குமார் சொல்கிறார். பின் இந்த சிலையை விற்கும் முயற்சியில் ஆதிக்கு என்னென்னலாம் பிரச்சனை வருகிறது? இறுதியில் ஒரு பெரிய திருப்பத்தினால் கதையே மாறுகிறது? அந்த திருப்பம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை ஒரு வித்தியாசமான கதைக்களத்தை இயக்குனர் கையாண்டு இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

தற்போது நடக்கும் சிலை கடத்தல் குறித்த விவரத்தை இயக்குனர் இந்த படத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். இந்த சிலை கடத்தல் வேலையை திருடனும் போலீஸ் செய்தால் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை காண்பித்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் நன்றாக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். போர் தொழில் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இருந்தாலும், இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இவரை அடுத்து கதாநாயகனாக வரும் அமிதாசும் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், இன்னும் நன்றாக இருந்தால் சரத்குமாரை விட மிஞ்சி இருக்கலாம். பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக நின்றிருக்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். அதோடு படத்தின் திருப்பங்கள் காண்பிக்கிறேன் என்று நிறைய இடங்களில் வளவளவென்று இயக்குனர் இழுத்து சென்றிருப்பது பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேவையில்லாமல் இருக்கும் காட்சிகளை நீக்கி இருக்கலாம். வழக்கம்போல் இறுதியில் பழிவாங்கும் கதையாக இந்த படத்தை இயக்குனர் காண்பித்து இருப்பது இருக்கிறார். இதை இன்னும் கொஞ்சம் மாற்றி சுவாரசியமாக கொடுத்திருந்தால் சூப்பராக ஹிட் கொடுத்திருக்கும். கதை நன்றாக இருந்தாலும் கதைக்களத்தை இயக்குனர் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக பரம்பொருள் இருக்கிறது.

நிறை :

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

பின்னணி இசை ஒளிப்பதிவும் ஓகே

சிலை கடத்தல் கதை

கதைக்களம் நன்றாக இருக்கிறது

குறை:

கதைளத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்

நீளத்தை குறைத்திருக்கலாம்

ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்

நிறைய தேவையில்லாத காட்சிகள்

கிளைமாக்ஸ் சொதப்பல்

மொத்தத்தில் பரம்பொருள்- இன்னும் முயற்சி செய்திருக்கலாம்

Advertisement