ஐயா படத்திற்கு முன்பே பார்த்திபன் படத்தில் நடிப்பதாக இருந்த நயன். முதல் படத்திலேயே இப்படி பண்ணி இருக்காரே லேடி சூப்பர் ஸ்டார்.

0
1491
- Advertisement -

ஐயா படத்திற்கு முன்பே நயன்தாரா நாயகியாக நடித்துள்ள படம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் எப்போதும் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா துறையில் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

-விளம்பரம்-

கடந்த 2019 ஆம் ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமா உலகில் கொண்டு வராத புது முயற்சியை பார்த்திபன் செய்து உள்ளார். இதனை தொடர்ந்து இவர் எடுத்த சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’ படமும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நயன்தாராவுடன் நடிக்க முடியாமல் போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, குடைக்குள் மழை படத்தில் நடிக்க முதலில் அன்றைய டயானாவாக, இன்றைய லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கின்ற நயன்தாரா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர்களால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

பிறகு அவர்களிடம் நான் போன் செய்து நீங்கள் வரவில்லை என்றாலும் என்னிடம் நேரில் வந்து சொல்லி இருக்க வேண்டும் என்று பேசிவிட்டு மதுமிதாவை வைத்து படம் எடுத்தேன். ஆனால், இப்போது நயன்தாராவோட வளர்ச்சியை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு. அவர்களோடு படம் பண்ணி இருந்தால் ரெண்டு மூணு படம் தொடர்ந்து பண்ணி இருக்கலாம் என்று தோணும். ஏன்னா, அந்த அளவுக்கு ரொம்ப தொழில் பக்தி உள்ள நடிகை.

-விளம்பரம்-

நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவை பார்க்கும்போது ‘நல்ல வேளை நீங்கள் என் படத்தில் நடிக்க வில்லை. அதனால் தான் நீங்கள் இவ்வளவு உயரத்தில் வந்திருக்கிறீர்கள்’ என்று சொன்னேன். அதற்கு அவர் சிரித்தார். பல நடிகைகள் என்னுடைய படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கும் என்று கூறினார்.தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளில் கலக்கிய நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டுலும் கால் பதித்திருக்கிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக் கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருக்கிறார் எந்த திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியாக இருந்தது மேலும் இந்த திரைப்படத்தில் வாலிபர் நடிகை தீபிகா படுகோன் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் அடுத்த மாதம் ஏழாம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement