விஜய் சேதுபதி,அசோக் செல்வனை தொடர்ந்து பீஸா சீரிஸ்ஸில் நடித்துள் அஸ்வின் – படம் எப்படி ? இதோ விமர்சனம்.

0
2055
Pizza
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஸ்வின். தற்போது அஸ்வின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பீட்சா 3. இந்த படத்தை இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து, ரவீனா, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அஸ்வின் ஹேமந்த் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க திகில் கதை. இந்த படம் ஏற்கனவே விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்த பீட்சா படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் பீட்சா 2, பீட்சா 3 படம் வந்திருக்கிறது. இந்த பீட்சா 3 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனுபமா, அவருடைய மகள் அபி வசித்து வருகிறார்கள். இவர்கள் சொந்தமாக ஸ்விட் கடை நடத்தி வருகிறார்கள். தன்னுடைய அம்மாவின் ஸ்வீட் கடைக்கு துணையாக அவருடைய மகள் அபி இருக்கிறார். பின் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கிய அபிக்கு ஞாபகம் பிரச்சினை ஏற்படுகிறது. சொல்லப் போனால் கஜினி மாதிரி 10 நிமிடத்திற்கு ஒருமுறை இவர் அனைத்தையும் மறந்து விடுகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவரை மூன்று பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். ஆனால், இது அவருக்கு தெரியவில்லை. இந்த விவரம் அந்த பெண்ணின் தாய்க்கு தெரிய வந்தவுடன் அம்மா, மகள் இருவரையும் கொலை செய்து விடுகின்றனர். தற்போது அந்த ஸ்வீட் கடை இருந்த இடத்தில் புதிய உணவகத்தை கதாநாயகன் அஸ்வின் திறக்கிறார். இவர் காவல் ஆய்வாளரின் தங்கை பவித்ராவை காதலிக்கிறார்.

நல்லபடியாக இவருடைய காதலும், ஹோட்டலும் சென்று கொண்டிருக்கிறது. பின் ஒரு நாள் இரவு நேரத்தில் இவருடைய ஹோட்டலில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறது. இது ஏன்? என்ன? என்று புரியாமல் அஸ்வின் குழம்பி நிற்கிறார். பின் அந்த இடத்தில் கொலைகளும் நடக்கிறது. அந்த பழி அஸ்வின் மீது விழுகின்றது. அதை செய்தது யார்? இந்த கொலைக்கும் அஸ்வினுக்கும் என்ன சம்பந்தம்? என்பது தான் படத்தின் மீதி கதை. வழக்கமான அரண்மனை, பங்களா, இடிந்த கட்டடம் போன்ற இடங்களில் தான் பேய்களை வைத்து அவர்களுக்கு ஒரு பிளாஷ்பேக்கை கொடுத்து அரைத்த மாவை அரைத்திருப்பார்கள்.

-விளம்பரம்-

ஆனால், இந்த படத்தில் வித்தியாசமான கான்செப்ட்டை இயக்குனர் கையாண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படம் தொடங்கிய போதே பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காட்சிகள் கோர்வையாக வருவது பாராட்டுக்குரிய ஒன்று. அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கும் போது உண்மையான திகில் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கதாபாத்திரத்திற்கு கேற்ப நடிகர்களை இயக்குனர் தேர்வு செய்திருப்பது கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

மேலும், படத்தில் நளன் கதாபாத்திரத்தில் அஸ்வின் நடித்திருக்கிறார். இந்த முழு படமும் அஸ்வினி தாங்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். திகில் படத்திற்கு ஏற்ப பின்னணி இசை கொடுத்திருப்பது அருமையாக இருக்கிறது. முதல் பாதி முடியும் வரையே என்ன கதை? என்ன நடக்கிறது? என்று காண்பிக்காமல் பார்வையாளர்களை விறுவிறுப்பில் இயக்குனர் வைத்து இருக்கிறார். அந்த விறுவிறுப்பு சில இடங்களில் பார்வையாளர்களை சோதித்து இருக்கிறது.

வழக்கமான பழிவாங்கல் கதை தான். ஆங்காங்கில் சில இடங்களில் கணிக்கக்கூடிய காட்சிகள் இருக்கிறது. திகில் கொடுத்த அளவிற்கு இயக்குனர் சுவாரசியத்தை கொடுக்க தவறி விட்டார் என்று சொல்லலாம். ஆனால், 11 வருடங்களுக்கு முன்பு வந்த பீட்சா படம் தந்த பயங்கர திகில் அனுபவத்தை இந்த படம் தந்திருக்கிறது என்று சொல்லலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான, பார்க்கக்கூடிய திகில் படமாக இருக்கிறது.

நிறை:

நடிகர்களின் தேர்வு சிறப்பு

அஸ்வினின் நடிப்பு பிரமாதம்

பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

கதைகளம் அருமையாக இருக்கிறது

குறை :

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில காட்சிகள் யூகிக்க கூடிய அளவிற்கு இருக்கிறது

இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை இயக்குனர் கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் பீட்சா 3- ருசியாக இருக்கும்

Advertisement