இறந்துபோன தனது மகளின் புகைப்படத்திற்கு முன்னாள் ஏக்கத்துடன் பிசி ஸ்ரீராம் – ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்

0
1991
- Advertisement -

இறந்த தன் மகளின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பி சி ஸ்ரீராம் பதிவிட்டு இருக்கும் உருக்கமான பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் பிசி ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவாளர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சியை முடித்து திரைத் துறையில் நுழைந்தார்.

-விளம்பரம்-

மேலும், தேசிய விருது பெற்ற பல வெற்றிப் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறர். அதோடு இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்கள் தொடங்கி தற்போது உள்ள நடிகர்கள் வரை பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் கமலை வைத்து குருதிப்புனல என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விக்ரம் நடித்த மீரா, வானம் வசப்படும் ஆகிய படங்களையும் இவர் இயக்கி இருந்தார்.

- Advertisement -

பிசி ஸ்ரீராம் திரைப்பயணம்:

இந்த மூன்று படங்களும் விமர்சனரீதியாக பாராட்டுகளை பெற்று இருந்தது. ஆனால், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதற்கு பின் இவர் படங்களை இயக்கவில்லை. இவர் கடைசியாக தமிழில் ஓ காதல் கண்மணி, ரெமோ படத்தில் பணி புரிந்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற பல படங்களிலும் இவர் பிசியாக இருந்தார். இதனை தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட நவரசா வெப் சீரிஸில் கெளதம் மேனன் இயக்கிய கிட்டார் கம்பி மேலே நின்று படத்திற்கு ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசி ஸ்ரீராம் மகள் :

மேலும், சமீப காலமாகவே இவர் சோசியல் மீடியாவில் எழும் சர்ச்சைகளுக்கு கருத்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மகளை நினைத்து சோகத்தில் பி சி ஸ்ரீராம் பதிவிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பி சி ஸ்ரீராமுக்கு இரண்டு குழந்தைகள். அதில் இவருடைய ஒரு மகள் பெயர் தான் ஸ்வேதா. கடந்த 2010 ஆம் ஆண்டு பி சி ஸ்ரீராம் மகள் ஸ்வேதா தன்னுடைய நண்பர்களுடன் வீட்டில் தீபாவளி கொண்டாடியிருந்தார்.

-விளம்பரம்-

பிசி ஸ்ரீராம் மகள் இறப்பு:

அப்போது ஸ்வேதா நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார். அப்போது அவருக்கு 24 வயது. இந்த சம்பவத்தால் பிசி ஸ்ரீராம் அதிகம் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இவருடைய மகள் ஸ்வேதா இறந்து 10 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. இது தொடர்பாக இவர் தன்னுடைய சோசியல் மீடியாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

ரசிகர்களின் ஆறுதல்:

அதில் இவருடைய வீட்டின் சுவரில் அவருடைய மகள் இருக்கும் புகைப்படத்தை பிசி ஸ்ரீ ராம் நின்று ஏக்கத்துடன் பார்க்கும் படியாக இருக்கிறது. இதிலிருந்து இவர் தன் மகளின் பிரிவை தாங்க முடியாமல் சிரமப்படுவது தெள்ளத் தெளிவாக பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது. இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதலை கூறி வருகிறார்கள்.

Advertisement