மோடியை tag செய்து காசி குறித்து விஷால் போட்ட Tweet – மோடியிடம் இருந்து வந்த பதில்.

0
411
vishal
- Advertisement -

நடிகர் விஷாலின் ட்வீட்டிற்கு பிரதமர் மோடி பதிலளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் செல்லமே என்ற படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். அனைவரும் எதிர்பார்த்து இருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் பிப்ரவரி மாதம் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இதனை அடுத்து விஷால் அவர்கள் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

விஷால் நடிக்கும் படம்:

இந்தப் படத்தின் போஸ்டர், டீசர் எல்லாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஷாலின் ட்வீட்டிற்கு பிரதமர் மோடி பதிலளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலை சீரமைக்க 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரனமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோயிலை திறந்து வைத்து தரிசனம் செய்திருந்தார்.

காசி விஸ்வநாதர் கோயில்:

அதற்கு பிறகு இரவு நேரத்தில் அவர் ஆய்வு செய்து அங்குள்ள மக்களிடம், கடை வியாபாரிகளிடமும் குறைகளை கேட்டிருந்தார். பின் காசி விசுவநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித இடையூறு இன்றி சுவாமி தரிசனம் செய்யும் விதமாக நதிக்கரையிலிருந்து கோவிலை இணைக்கும் பாதை வரை 320 கிலோமீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடை பாதை வசதியை செய்து தந்தார். இதனால் தற்போது மக்கள் எவ்வித கூட்ட நெரிசலும் இல்லாமல் தரிசனம் செய்கிறார்கள்.

-விளம்பரம்-

விஷால் டீவ்ட்:

அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆன்மீக அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு மையங்கள் போன்ற வசதிகளையும் செய்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் விஷால் தன்னுடைய நண்பர்களுடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு கோயிலை பார்த்து வியந்து விஷால் twitter பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அன்புள்ள பிரதமர் மோடி ஜி, நான் காசிக்கு சென்று அற்புதமான தரிசனம் செய்தேன். கங்கா நதியின் புனித நீரை தொட்டேன்.

பிரதமர் பதில் டீவ்ட்:

கோவிலை புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாக மாற்றி உள்ளீர்கள். எவரும் தரிசிக்க கூடிய வகையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என தெரிவித்திருந்தார். இதனை அடுத்து நடிகர் விஷாலின் டிவிட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதில் டிவீட் போட்டு இருக்கிறார். அதில் அவர், காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்து இருக்கிறார்.

Advertisement