இந்த கேள்வியை விஜய் கிட்ட கேளுங்க. ரசிகர் கேட்ட கேள்விக்கு கார்த்திக் பட நடிகையின் பதில்.

0
1280
Vijay
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் அதிதி ராவ் ஹைதாரி. நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் அரச வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல், பாடகியும் ஆவார். புகழ் வாய்ந்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிருங்காரம் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Film: What 'Kaatru Veliyidai' says about psychologically toxic ...

- Advertisement -

இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் மட்டும் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் என்ற படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா உடன் இணைந்து அதிதி ராவ் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருனு தெரியுதா? பாத்தா நம்ப மாடீங்க.

சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சைக்கோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை அதிதி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் யாரும் வெளியே செல்வதில்லை.

-விளம்பரம்-

இதனால் பிரபலங்கள் கூட வீட்டிலேயே இருக்கிறார்கள். பிரபலங்கள் பலர் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக டிக் டாக் வீடியோக்கள், சமையல் செய்வது, புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது என பல வேலைகளை செய்து வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை அதிதி அவர்கள் சோசியல் மீடியாவில் தன்னுடைய ரசிகர் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.

இதையும் பாருங்க : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்ஷ்னுக்கு ஜோடியாக நடித்தவர் இந்த பிரபல இயக்குனரின் மகளா.

அதில் ரசிகர் ஒருவர் ‘ தளபதி விஜயுடன் எப்போது நீங்கள் நடிக்க போகிறீர்கள்?’ என கேட்டுள்ளார். அதற்கு அதிதி அவர்கள் கூறியிருப்பது,’ இதனை தளபதி விஜய் இடம் கேளுங்கள்’ என்றார். பின்னர் மற்றொரு ரசிகர் ‘தல அஜித் குறித்து ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அதிதி அவர்கள் கூறியிருப்பது,’ நிரந்தரமான கிளாஸ் ஆனவர்’ என்று தெரிவித்தார். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தல, தளபதி இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவின் தூண்கள் என்று தான் சொல்ல வேண்டும். தல, தளபதி படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் “துக்ளக் தர்பார்” எனும் கதையில் நடிக்கிறார். டைட்டிலைப் பார்க்கும் போது அநேகமாக அரசியல் கதையாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக நடிக்கிறார்.

Advertisement