உறவில் சம்மந்தம் செய்யும் பரம்பரை பழக்கம் – சொத்து பிரச்சனையால் சிதைந்த பந்தம். பிரபு மகளின் முதல் விவாகரத்து பின்னணி இதுதானா?

0
749
- Advertisement -

நடிகர் பிரபு மகளின் முதல் திருமணம் முறிவுக்கு காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பிரபு மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. பிரபுவின் மகள் ஐஸ்வர்யா, மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவருமே காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்களுடைய காதலுக்கு பிரபு குடும்பம் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

இது பிரபு மகளின் இரண்டாவது திருமணம் ஆகும். ஏற்கனவே ஐஸ்வர்யாவிற்கு பிரபு உறவினர் குணாலுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார்கள். பின் கருத்து வேறு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கூட்டு குடும்பத்திற்கு உதாரணம் என்றால் சிவாஜி குடும்பம் தான். சென்னையில் அன்னை இல்லத்தில் சிவாஜி குடும்பம் மட்டும் இல்லாமல் அவருடைய சகோதரர்கள், சகோதரிகள் குடும்பம் எல்லாம் ஒன்றாக தான் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.

- Advertisement -

சிவாஜியின் வீட்டில் மட்டும் 30க்கும் அதிகமான ஊழியர்கள் அந்த வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார்கள். அதோடு சிவாஜி குடும்பத்தை பொறுத்தவரை ஒரே குடும்பத்திலிருந்து பெண் அல்லது மாப்பிள்ளை எடுப்பது தான் வழக்கம். சிவாஜியின் மனைவி கமலா அம்மாவும் அவருடைய தம்பி சண்முகத்தின் மனைவி அலமேலுவும் அக்கா- தங்கைகள். இன்னொரு தம்பி தங்கவேலுவின் மனைவி மற்றும் வேறு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். இதனாலே சிவாஜி, சண்முகம் ரெண்டு குடும்பத்திற்கு இடையே நல்ல நெருக்கம் இருக்கிறது.

தங்கவேலு குடும்பம் மட்டும் கொஞ்சம் தள்ளி இருந்தது. அதேபோல் சிவாஜி மகள்கள் இரண்டு பேருமே அண்ணன், தம்பிகளை தான் கல்யாணம் செய்து கொண்டார்கள். சாந்தியின் கணவர் நாராயணசாமியும், தேன்மொழியின் கணவர் கோவிந்தராஜும் சகோதரர்கள். சிவாஜியின் சகோதரி பத்மாவதியின் கணவர் வேணுகோபால் சிவாஜிக்கு மாப்பிள்ளை முறை என்பதால் அவரை மாப்பிள்ள என்றுதான் அழைப்பார்கள். அவர்தான் சாந்தி தியேட்டர் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், சிவாஜி உயிருடன் இருக்கும் வரை உறவுக்குள் சின்ன சின்ன பிரச்சனை வந்தால் கூட எல்லாத்தையும் சரி செய்து விடுவார். அவருடைய சொல்லுக்கு அனைவருமே கட்டுப்பட்டு இருந்தார்கள். சிவாஜியின் மறைவிற்கு பிறகு சில ஆண்டுகளில் குடும்பத்தில் பிரச்சனை பெரிதாக மாறியது. குறிப்பாக, சிவாஜி கணேசன் இரண்டு மகள்களுமே பிறந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவி வெளியேறி விட்டார்கள். சிவாஜியின் தம்பி, மறைந்த சண்முகத்தின் குடும்பமும், ராம்குமார்- பிரபு குடும்பத்துடன் சேர்ந்து இன்னைக்கும் அன்னை இல்லத்தில் தான் இருக்கிறார்கள்.

சிவாஜி குடும்பத்தில் பிரச்சனை தொடங்கியதே இந்த சொத்து விவகாரத்தில் தான். சிலர் சொத்துக்களை பிரபு தன்னுடைய சகோதரிகளுக்கு தெரியாமல் விற்று விட்டார் என்று சிவாஜியின் மகன்கள் வழக்கு தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே. இதற்கு இடையில் சொந்தம் விட்டு விடக்கூடாது என்று பிரபு தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தேன்மொழி மகன் குணாலுக்கே திருமணம் செய்து கொடுத்திருந்தார். ஆனால், இவர்கள் இடையே குடும்ப வாழ்க்கை சரியாக இல்லாமல் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டார்கள். ஏற்கனவே சொத்து பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய விவாகரத்தும் சேர்ந்து கொண்டது. சொல்லப்போனால் சொத்து பிரச்சனையால் தான் ஐஸ்வர்யா- குணால் இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

Advertisement