உள்ளே வந்த தனது தோழியின் செயலால் அப்சட் ஆகி மாயாவிடம் புலம்பிய பூர்ணிமா. இதான் காரணம்.

0
645
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பூர்ணிமா வேதனையுடன் புலம்பி அழுது இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி 58 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷ்யா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து அனல் பறந்து கொண்டு சென்றிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிட்சயமான நபர்களில் பூர்ணிமா ரவியும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மற்ற போட்டியாளர்களை கிண்டல் கேலி செய்து கலாய்த்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா:

குறிப்பாக, மாயாவுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் அளவே இல்லை. இப்படி இருக்கும் நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்தா அர்ச்சனா, தினேஷிடம் இவர் அதிக சண்டையில் சிக்கி இருந்தார். அதோடு இவர் கேப்டனாக இருந்த போது செய்த செயல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. அதோடு கமல் வரும் நாட்களில் எல்லாம் அர்ச்சனா, தினேஷை கைத்தட்டி மக்கள் ஆரவாரம் செய்வதை கண்டு பூர்ணிமா கதி கலங்கிவிட்டார்.

வெளுத்து வாங்கிய கமல்:

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து இரண்டு, மூன்று வாரங்களாகவே பூர்ணிமா செயல் குறித்து கமல் கண்டித்து பேசி இருக்கிறார். குறிப்பாக, கடந்த வாரம் பூர்ணிமாவை கமல் வெளுத்து வாங்கி இருந்தார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கண்கலங்கி பூர்ணிமா மற்ற போட்டியாளிடம் அழுது புலம்பி இருக்கிறார். ஒரு கட்டத்தில் நாம் சரியாக தான் விளையாடுகிறோமா? இல்லை வெளியில் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? என்றெல்லாம் குழப்பத்தில் பூர்ணிமா இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்துஜா-ஹரிஸ் என்ட்ரி:

இப்படி இருக்கும் நிலையில் சிறப்பு விருந்தினராக ஹரிஷ் கல்யாண்- இந்துஜா தங்களுடைய பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இந்துஜா- பூர்ணிமா இருவருமே கல்லூரி தோழிகள். இருவருமே நட்பை தாண்டி ரொம்ப நெருங்கி பழகியும் இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்துஜா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் பூர்ணிமாவை கண்டு கொள்ளவே இல்லை. மற்ற போட்டியாளர்களிடம் சகஜமாக பேசிய அளவு கூட பூர்ணிமாவிடம் பேசவில்லை. இதனால் பூர்ணிமா ரொம்பவே மனசு உடைந்து போய்விட்டார்.

புலம்பிய பூர்ணிமா:

இந்த நிலையில் இது குறித்து விஷ்ணு, மாயாவிடம் பூர்ணிமா புலம்பி இருக்கிறார். அதில் அவர், என்னவோ நடக்குது. எனக்கு தெரியவில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள். ஆனால், என்னிடம் அவள் சரியாக பேசவே இல்லை. வெளியில் நடப்பதை குறித்து நான் அவளிடம் கேட்கவே இல்லை. ஆனால், அவள் என் கண்ணை பார்த்து கூட பேசவில்லை. ஏதோ தப்பாக இருக்கிறது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அவள் என்னை பார்த்தால் எப்படி நடந்து கொள்வார் என்று எனக்கு தெரியும். இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு மாதிரியாக இருக்கேன். வெளியிலிருந்து தெரிந்த முகம் உள்ளே வரும்போது எனக்கு வெளியில் என்ன நடப்பது என்று சொல்ல தேவையில்லை. எனக்கு ஆறுதலாக பேசினால் நன்றாக இருக்கும். எனக்கு ரொம்ப ரொம்ப நெருங்கிய தோழி. ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று புலம்பி கொண்டு இருக்கிறார்.

Advertisement