தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் பிரபுதேவா. தற்போது பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மை டியர் பூதம். இந்த படத்தில் ரம்யா நம்பீசன், அஸ்வந்த், சம்யுக்தா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மஞ்சப்பை, கடம்பன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராகவன் இயக்கி இருக்கிறார். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு குழந்தைகளுக்கான படமாக மை டியர் பூதம் இன்று வெளியாகி இருக்கிறது. இது குழந்தைகளின் மனதை கவர்ந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
குழந்தைகளுக்கான படமாக மைடியர் பூதத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 2022கிட்ஸ்களை மகிழ்விக்கும் வகையில் வெளியாகி இருக்கிறது. அலாவுதீன் திரைப்படம் தான் இந்த மை டியர் பூதம். படத்தில் புத்துக்குள் முனிவர் ஒருவர் தியானம் செய்து கொண்டு இருக்கிறார். அங்கு பிரபுதேவாவின் மகன் சென்றதால் முனிவரின் தியானம் கலைகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முனிவர் பிரபுதேவாவின் மகனுக்கு சாபம் விட போகிறார். இதை அறிந்த பிரபுதேவா முனிவரிடம் மன்றாடி அந்த சாபத்தை பிரபுதேவா வாங்கிக்கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார்.
பின் அந்த பொம்மையிலிருந்து பூதத்தை சிறுவன் திருநாவுக்கரசு விடுவிக்கிறார். தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக இருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர பிரபுதேவா விரும்புகிறார். ஆனால், அதற்கு அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும். அதை திருநாவுக்கரசு செய்தாரா? பிரபுதேவா தன் மகனுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படத்தில் பூதம் கர்க்கி கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார்.
சிறுவன் திருநாவுக்கரசு கதாபாத்திரத்தில் அஸ்வந்த் நடித்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பத்து வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் இந்த படத்தை பயங்கரமாக என்ஜாய் பண்ணிப் பார்ப்பார்கள். இருந்தாலும் பெரியவர்களை ஈர்க்கும் வகையில் சில விஷயங்களை படத்தில் இயக்குனர் செய்திருக்கிறார். ஆனால், அது எந்த அளவிற்கு பெரியவர்கள் மத்தியில் ரீச் ஆகும் என்பது நாளடைவில் தான் தெரியும்.
படத்தில் சிறுவன் அஸ்வத் – பிரபுதேவா உடைய கெமிஸ்ட்ரி எல்லாம் பக்காவாக இருக்கிறது. இந்த படத்திற்காக பிரபுதேவா மொட்டை போட்டு நடித்திருக்கிறார். பிரபுதேவா தன்னுடைய காமெடி நடிப்பின் மூலம் குழந்தைகளை கவர்ந்து இழுப்பது பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அஸ்வந்த் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தில் திக்குவாய் பிரச்சனை உள்ளது போல் நடித்து இருக்கிறார். அஸ்வந்த், பிரபுதேவாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக உள்ளது.
அம்மாவின் கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். படத்தில் ஜாலியான காட்சிகள், எமோஷனல் என இரண்டையுமே காண்பித்திருக்கிறார் இயக்குனர். முழுக்க முழுக்க இந்த படம் குழந்தைகளை கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கோடை விடுமுறையில் படத்தை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பள்ளி செல்லும் நேரத்தில் படம் ரிலீஸ் ஆகி இருப்பது மைனஸாக அமைந்திருக்கிறது.
நிறைகள் :
பிரபுதேவா, அஷ்வந்த் நடிப்பு பாராட்டுகளை குவித்து இருக்கிறது.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.
முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் விதமாக படம் அமைந்துள்ளது.
பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக உள்ளது.
குறைகள் :
பெரியவர்களை கவர்வதில் கொஞ்சம் சந்தேகம் தான்.
கோடை விடுமுறையில் வந்திருந்தால் படம் ஹிட்டு அடித்து இருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆங்காங்கே சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் .
மற்றபடி பெரிய அளவு குறைபாடுகள் எதுவும் இல்லை.
இறுதி அலசல்:
குடும்பத்துடன் குழந்தைகளுடன் கொண்டாடும் படமாக மை டியர் பூதம் உள்ளது.
மொத்தத்தில் மை டியர் பூதம்- குழந்தைகளுக்கான பூதம்.