ஒரு பார்வையாளருக்கு ஒரு ரூபாய்ன்னு கொடுத்தால் தான் பேட்டி கொடுப்பேன் என்று பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி நேற்றோடு வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது,. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
நேற்று மாலை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தவர் அர்ச்சனா. இவர் தான் இந்த சீசனில் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருக்கிறார்கள். மேலும், அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 7:
மேலும், இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது பிக் பாஸ் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் youtuberகளுக்கு எல்லாம் ஒரே குஷி தான். அவர்களை வைத்து பேட்டி எடுக்க வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த உடனே சில வாரங்கள் போட்டியாளர்களுடைய பேட்டி வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரு.ம் இதனால் ரசிகர்களுமே அதை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே இருக்கும்போதும் வெளியே வந்தும் அதிகமாக போட்டியாளர்களை குறித்து தான் மக்கள் மத்தியில் பேசப்பட்டு இருக்கும்.
நிகழ்ச்சியில் பிரதீப்:
அந்த வகையில் இந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி வந்தார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் பிரதீப் மீது குற்றம் சாட்டியதால் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள்.
பிரதீப் பதிவு:
இதனால் ரசிகர்கள் கமலை வறுத்து எடுத்திருந்தார்கள். மேலும், மீண்டும் பிரதீப் பிக் பாஸ் வீட்டுக்குள் வராதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பிரதீப் தன்னுடைய twitter பக்கத்தில், என்னிடம் எக்கச்சக்கமான யூடியூப் சேனல்கள் பேட்டி எடுக்க அனுமதி கேட்டு இருக்கிறார்கள். அதற்காக பணம் தருவதாகவும் சொல்கிறார்கள்.
Interview kettu varum social media channelgale, epdiyum neenga brands kitta laam amount vaangi, enna vikka dhan poreenga. So, vandhu vela ilama pesurathukaaga video oru view ku 1₹ kanakku vechu agreement pottu kudutheengana, I'm Game✌️ #SolvathellamUnmailaVaraVendiyavanDaNaanu pic.twitter.com/mpddQIXzT3
— Pradeep Antony (@TheDhaadiBoy) January 14, 2024
ரசிகர்கள் அதிருப்தி:
எப்படியும் இந்த சேனல்கள் எல்லாம் விளம்பரத்திற்காக என்னை விற்கத்தான் போகிறார்கள். அதனால் தான் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டிக்கும் ஒரு வியூவுக்கு ஒரு ரூபாய் என்ற விதம் எனக்கு பணம் கொடுத்தால் தான் பேட்டி அளிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த பதிவுடன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஒரு பகுதியையும் அவர் பகிர்ந்து சொல்வதெல்லாம் உண்மையில் வரவேண்டியவன் டா நான் என்று ஹாஷ்டேக்கையும் போட்டு இருக்கிறார்.