ஆச்சாரமான,பக்குவமான,படித்த அப்பான்னு காட்ட தான் என் ஷாட் பிலிமில் கூட அந்த நாம காட்சியை வைத்தேன். கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

0
510
pradeep
- Advertisement -

லவ் டுடே படத்தில் சத்யராஜை ஒரு ஆச்சாரமான நபராக காண்பிக்க இயக்குனர் சொன்ன உதாரணம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப்.

- Advertisement -

உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார்.அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

தையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் இந்த படத்தின் சத்யராஜை எப்படி ஒரு ஆச்சாரமான, Strictஆன, Perfect அப்பாவாக காண்பித்தேன் என்பது குறித்து பேசி இருக்கும் வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த படத்தின் ட்ரைலரிலேயே சத்யராஜ் ஒரு Strictஆன அப்பாவாக தான் காண்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்தின் சத்யராஜ் படம் முழுக்க நெற்றியில் ஒரு நாமத்துடன் தான் வருகிறார்.இதுகுறித்து பேசி இருக்கும் இயக்குனர் பிரதீப் ‘படத்தில் அவர் ஒரு ஐயங்கார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும். நான் அவரை இந்த படத்தில் அவரை ஒரு ஆச்சாரமான, Strictஆன நபராக காண்பிக்க ஆசைப்பட்டேன். நான் App Lock குறும்படம் பண்ணும் போதும் ஒரு அப்பா Perfectah, Strictஆ இருப்பார்னு அந்த ஷார்ட் பிலிம் பண்ணும் போது ஆரம்பித்தேன். ஷார்ட் பிலிமில் 3 நிமிடம் தான் கண்டன்ட்.

அவர் Perfectஆ இருக்கிறார் என்று காட்ட என்ன பண்ணனும்னா ஒரு நமத்தை Perfectஆ வச்சா அவர் ஒரு பயங்கர ஆச்சாரமான, Strictஆன படித்த ஒரு அப்பா என்பதை காட்ட ஒரு இமேஜ் தேவைபட்டதால் அந்த ஷார்ட் பிலிமில் நான் அந்த காட்சியை வைத்தேன். இந்த படம் பண்ணும் போது ஷார்ட் பிலிமில் வைத்த அந்த ஷாட் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த நாமும் போடும் ஒரு ஷாட்டில் அவர் பக்குவமான மற்றும் ஆச்சராமான நபராக கம்பிக்க எனக்கு உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement