கடந்த பல ஆண்டுகளாக நிலவி வந்த நடிகர் ரஜினிகாந்த்தின் குழப்ப அரசியல் தற்போது ஒரு சின்ன தெளிவை எட்டியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதனால் சிலரது கண்டனத்தையும், வரவேற்பினையும் பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதேபோல், நடிகர் பிரகாஷ் ராஜும் அரசியலுக்கு வரவுள்ளதாக ஒரு செய்தியை கூறியுள்ளார். ஒரு நாட்டை அந்த நாட்டின் மண்ணின் மைந்தன் தான் ஆளவேண்டும் எனக் கூறி தற்போது ஒரு திகைப்பை ஏற்படுத்தினார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
ஏனெனில் சில காலத்திற்கு முன்னர், எந்த ஒரு நாட்டையும் தகுதி உடையவர் ஆளலாம். தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்ற கருத்தை தான் எதிர்ப்பதாக கூறி இருந்தார். ஆனால் இந்த கருத்துக்கு நேர் எதிராக உள்ளது அவர் இப்போது கூறிய கருத்து. இதனால் அவர் மாற்றி மாற்றி பேசுவதாக பலரும் கூறி வந்தனர்.
இதையும் படிக்கலாமே:
விசுவாசம் படத்தில் இருந்து யுவன் விலகிவிட்டாரா ? உண்மை என்ன?
தற்போது, பெங்களூர் பிரஸ் கிளப் சார்பாக பிரகாஷ் ராஜுக்கு சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டது. இதனை பெற்று கொண்டு அந்த விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ்.
எனக்கு அரசியலுக்கு வர ஆரவம் இல்லை. ஆனால் என்னை வர சொல்லி நிர்பந்தித்தால் கட்டாயம் வருவேன் எனக் கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.