விவேகம் படத்தினை தொடர்ந்து அடுத்தாக மீண்டும் சிவாவின் இயக்கத்தில் நடிக்கிறார் தல அஜித். இந்த படத்தின் தலைப்பு சில மாதங்களுக்கு முன்னர் வழக்கமான தலயின் வியாழக்கிழமை செண்டிமென்டில் வெளியிடப்பட்டது. ‘விஸ்வாசம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா வருவதாக இருந்தது.
இதற்கு முன்னர் அஜித்-யுவன் கூட்டணி எப்போதும் செம்ம மாஸ் படங்களை கொடுத்துள்ளது. பில்லா, மங்காத்தா என பல படங்களில் பின்னணி இசையில் பிரித்தெடுத்திருப்பார் யுவன். இதனால் விஸ்வாசம் படத்தில் அஜித்-யுவன் மேஜிக் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே:
தளபதி 62, விசுவாசம் இரண்டு படத்திலும் கீர்த்தி சுரேஷ் தான் நாயகியா ?
ஆனால் தற்போது யுவன்சங்கர் ராஜா தனுசின் மாரி-2 மற்றும் பல படங்களை கையில் வைத்திருக்கிறார். இதன் காரணமாக யுவனுக்கு பதிலாக விஸ்வாசம் படத்தில் இசை அமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன. ஆனால் படக்குழுவிடம் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.