சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இந்த விமர்சனம் மூலமாக அதிக அளவு பிரபலமாகி தன்னுடைய கனவு நினைவாகி விட்டது என்று நினைத்துக் கொண்டு உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் அவருடைய பட விமர்சனங்கள் அதிக அளவில் மாஸ் கொடுத்தன.
இந்த நிலையில் பிரசாந்த் ப்ளூ சட்டை மாறனின் மறுபக்கத்தைப் பற்றியும் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே ஒரு பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இவர் சொந்த காசில் மாதம், மாதம் 75 ஆயிரம் ரூபாய் வரை மரம் நடுவதற்கான மரங்களின் விதைகளை கிராமங்களுக்கு கொடுத்து அனுப்புவார். இதுவரை ப்ளூ சட்டை மாறன் ஒரு லட்சத்திற்கும் மேலான மரக்கன்றுகளின் விதைகளை அளித்துள்ளார். விவேக் தொடர்ந்து அந்த வரிசையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் உள்ளார். மரம் வளர்ப்பதின் மூலம் நம் நாட்டில் இருக்கும் தண்ணீர் பிரச்சினை தட்டுப்பாட்டை நீக்கலாம் என்ற நோக்கில்தான் நான் இதை செய்து வருகிறேன் என்றும் ஒரு பேட்டி அளித்துள்ளார். இப்படி சமூக சேவைகள் ஒருபக்கம் செய்து வந்தாலும், இவர் படங்களை குறித்து விமர்சனங்களை எழுப்புவது நிற்கவே இல்லை. ஒருமுறை இவர் பிரபுதேவாவின் நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் 2 படத்தை இதெல்லாம் ஒரு கதையா என்று பயங்கரமாக விமர்சித்துள்ளார்.
இதனால் அந்த படத்தின் வசூலும் குறைந்துவிட்டது என்று தயாரிப்பாளர் கூறி அவர் மீது புகாரும் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தல அஜித்தின் விவேகம் படம், கோலி சோடா படம் போன்ற பல படங்களை விமர்சித்து சினிமா துறையில் உள்ள இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள் இடம் வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் நிறைய தயாரிப்பாளர்களும் ,இயக்குனர்களும் இவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்கள். இந்த நிலையில் சினிமா துறை சார்பாக சுரேஷ் காமாட்சி என்ற தயாரிப்பாளர் மட்டும் தான் ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவாக பேசினார். இதற்கு பிறகு சுரேஷ் காமாட்சி தன்னுடைய கதை பற்றி ப்ளூ சட்டை மாறன் இடம் கூறினார். இந்த கதை அவருக்கு பிடிக்கவே ,சரி இந்த படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்தார்கள் .
ஆனால் சில மாதங்களுக்கு முன் சிம்பு நடிக்க, வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்தது.ஆனால் சிம்பு படப்பிடிப்பிற்கு வராததால் இந்த படம் நின்றுவிட்டது. இந்தநிலையில் இந்த மாநாடு என்ற படத்தை ப்ளூ சட்டை மாறன் இயக்கவும், சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதற்கான பூஜையும் நடந்து படப்பிடிப்புகள் தொடங்கி விட்டது. இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.ப்ளூ சட்டை மாறன் எப்படி படம் எடுக்கிறார் என்று ஒரு பக்கம் பேச இன்னொரு பக்கம் ப்ளூ சட்டை மாறன் ஆதரவான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இவர் தன்னுடைய படத்தை எப்படி விமர்சிப்பார் என்ற கேள்விகளும் இணையதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.