மாபெரும் நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள பிரியா பவானி.! செம லக்கு தான்.!

0
3238
Priyabhavani

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருந்தார்.

Related image

அந்த படத்தை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் மிகப்பெரிய நடிகரான கமலின் ‘இந்தியன் 2 ‘ படத்தில் பிரியா பவானி சங்கர் கமிட் ஆகியுளளார். சங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாவதாக இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் சங்கீதா.? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.! 

- Advertisement -

இந்நிலையில், மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியன்-2 படத்திற்கான தேதிகளை கமல்ஹாசன் ஒதுக்கியுள்ளார். இதனால் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடந்து நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளது.

Image result for indian 2

இந்த படத்தில் ஏற்கனவே காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார் என்று அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த படத்தில் நடிகர் சிததார்த்தும் ஒப்பந்தமாகியுள்ளார். எனவே, இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கமலுக்கு மகளாகவோ அல்லது சித்தார்த்துக்கு ஜோடியாகவோ நடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-

இந்தியன் 2 படமே இன்னும் துவங்கப்படாமல் இருக்க கமலின் “தலைவன் இருக்கின்றான்” திரைப்படம் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் “ கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கமல்ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

Advertisement