விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர்.. படத்தின் அம்சம் தெரியுமா?

0
2626

விஜய் சேதுபதி தற்போது ‘இதற்குத் தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுலின் இயக்கத்தில் ‘ஜூங்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வித்யாசமான விஜய் சேதுபதியின் ‘லுக்’ ஒன்று வெளியிடப்பட்டு சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

priya bhavani shankar

மேலும், இந்த படம் வெளிநாட்டில் வாழும் டான் பற்றிய கதையாகும், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு கதா நாயகியாக வனமகன் திரைப்படத்தில் நடித்த ‘சயேஷா சைசல்’ நடித்து வருகிறார்.

தற்போது படத்தின் கருவிற்கு பாத்திரமாக நடிக்க மேயாத மான் திரைப்படத்தில் நடித்த ப்ரியா பவானி சங்கர் அழைக்கப்பட்டுள்ளார். ப்ரியா பவானி சங்கர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நட்சத்திரமாக நடித்தவர். தற்போது மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார்.
Vijay Sethupathi

இப்படத்திற்கு சித்தார்த்த் விபின் இசையமைக்கிறார். சித்தார்த் விபின் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பால குமாராவில் குமுதாவின் பாதுகாவலனாக வந்து. ‘அந்த 18 வயசுக்கு கீழ் உள்ளவங்க எனற டைலாக்கை பேசும்’ பாத்திரத்தில் நடித்தவர் ஆவார். மீண்டும் இதே கூட்டணி ‘ஜூங்கா’ படத்திற்கு இணைவதால் படத்தில் காமெடி காட்சிகள் எப்படியும் சக்கைபோடு போடும். மேலும், மேயாத மான் அழகி ப்ரியா பவானி சங்கரும் படத்தில் உள்ளதால், கண்களைக் கவரும் அழகிற்கும் பஞ்சமில்லை எனலாம்.