விசாலின் வரி பாக்கி எவ்வளவு தெரியுமா??

0
617
vishal-actor

மெர்சல் பட விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் ஹெச்.ராஜா ஒரு தொலைகாட்சி விவாதத்தின் போது படத்தை நெட்டில் பார்த்தேன் எனக் கூறினார். அதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கடுமையாக கண்டனம் தெரிவித்து ஹெச் ராஜாவை படத்தை நெட்டில் பார்த்ததற்கு மன்னிப்பு கோரும்படியும் கூறினார்.

vishal

அதற்கு அடுத்த நாளே விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் டி.டி,எஸ் வரிக்குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர், இந்த சோதனையில் அவர் இன்னும் 51 லட்சம் வரி பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Vishal

இது தொடர்பாக விளக்கம் அளிக்க வருமானவரித்துறை அலுவலகத்திற்கு நேற்று வருமாறு விஷாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நேற்று விஷாலுக்கு பதிலாக அவரது ஆடிட்டர் மற்றும் விஷால் பிலிம் பேக்டரி அலுவலர்கள் ஆஜரானார்கள். 51 லட்சம் வரி பாக்கிக்கான கணக்கு புத்தகம் மற்றும் ஆவணங்களையும் சமர்பித்தனர்.

மேலும், 51 லட்சம் வரியை விஷால் செலுத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். அதற்கு கால அவகாசமும் கேட்கப்பட்டுள்ளது. 51 லட்சத்தை மூன்று தவணைகளில் செலுத்த உள்ளதாக விஷால் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.