1984 ஆம் ஆண்டு வெளியான “மலையூர் மம்மட்டியான்” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “அன்புள்ள ரஜினிகாந்த்” போன்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி . இவர் முதன் முதலில் நடிகராக அவதாரம் எடுத்தது பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் தான்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மணி, நான் பல படங்களை தயாரித்து பின்னர் அதில் நஷ்டமாகி சீரியல்களை கூட தயாரிக்க சென்று விட்டேன். என்னை பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிக்க அழைத்த போது நான் பாலாவிடம் முதலில் முடியாது என்று தான் சொன்னேன்.
ஆனால், அவர் மிகவும் திமிரு பிடிச்சவர் என்னை விடாமல் கேட்டுக்கொண்டே இருந்ததால் நான் ஒப்புக்கொண்டேன். அதற்காக நான் 1 வருட காலம் தாடி எல்லாம் கூட வளர்த்தேன். என் அம்மா இறந்த போது கூட நான் தாடி எடுக்காமல் தான் கொல்லி வைத்தேன். ஆனால், எனக்கு பாலா கொல்லி வைத்து விட்டான்.
நான் ஒரு முறை ஒரு பேட்டியில் இந்த படம் குறித்து பேசியதால் பாலா என்னிடம் கோபித்துக் கொண்டு யாரை கேட்டு நீங்கள் இந்த படத்தில் நடிச்சிருக்கீங்கனு சொன்னீங்க என்றார், நான் அதற்கு அவரிடம் மன்னிப்பும் கேட்டேன். ஆனால் என்னுடைய பெயர் திரையில் ஒரு ஓரத்தில் தான் போடப்பட்டது.
அவனுக்கு நடிக்கவே தெரியாது ஒரு முறை கூட மற்ற நடிகர்களுக்கு அவன் நடித்து காண்பித்ததே இல்லை. எங்கள் இஷ்டத்திற்கு தான் நடிக்க சொல்வார். அவன் ஒரு சாடிஸ்ட் நான் கடவுள் படத்திற்கு பிறகு அவர் ஏதாவது ஹிட் படத்தை கொடுத்தாரா? அவன் படம் ஒன்னும் ஓடாதது என் சாபங்கள் கண்டிப்பாக பழிக்கும் பாருங்கள் என்று மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.