வைரலான ரத்னவேல் கதாபாத்திரம் : பகத் பாசில் இத ஞாபகம் வச்சுக்கனும் – புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி.

0
1499
Maamannan
- Advertisement -

பகத் பாசில் குறித்து வரும் மீம்ஸ்களை நீக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி கிருஷ்ண சாமி அளித்திருக்கும் வேண்டுகோள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் பல உள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமல்ஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

மாமன்னன் படம்:

மேலும், இந்த படம் தெரிவித்து மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்தது,மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்து உள்ளது . இதனால் படக்குழு சமீபத்தில் வெற்றி விழா நடத்தி இருந்தது. அதன் பின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பகத் பாசில் குறித்த தகவல்:

மேலும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாசிலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி கூட்டமே உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தலைவர் லெவலுக்கு எடிட் செய்து கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தேவர் மகன் படத்திற்கும் இந்த படத்திற்கும் உள்ள ஒப்பிட்டினை எல்லாம் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் மாமன்னன் படம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் வேண்டுகோள் ஒன்று வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இசை வெளியீட்டு விழா

அதில் அவர், மாமன்னன் திரைப்படம் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் சம்பந்தமில்லாமல் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தேவன் மகன் படத்தை சுட்டிக் காட்டி பேசி இருந்தார். அதில் இருக்கும் கதாபாத்திரம் தான் மாமன்னன் படத்தில் வந்திருக்கிறது என்று கூறினார். ஆனால் அது முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் கொண்ட படம். எத்தனையோ கதைகருக்கள் இருக்கின்றது. அதையெல்லாம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் ஜாதியை வைத்து படம் எடுப்பது அவசியம் இல்லாத ஒன்று. மாரி செல்வராஜ் நல்ல கதைகளை வைத்து படம் எடுக்க வேண்டும்.

கிருஷ்ணசாமி வேண்டுகோள் :

அதேபோல் பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். மாமன்னன் படத்தில் அவர் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரத்தை தவறான நோக்கத்துடன் ஜாதி பிரிவினைகளையும், மோதல்களையும் தூண்டும் வகையில் சிலர் உருவாக்கி இருக்கும் மீம்ஸ், வீடியோக்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பகத் பாசிலே முன் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது அவருக்கு சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்திவிடும். அவர் நல்ல நடிகர். இதுபோன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளக்கூடாது. இது நான் பகத் பாசிலுக்கு வேண்டு கோளாகவே வைக்கிறேன்! என்று கூறியிருக்கிறார்.

Advertisement