பொண்ணு கல்யாணத்துக்கு நேர்ல பத்திரிக்கை வைக்க போனப்ப – கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ராதா கண்ணீர் மல்க பேட்டி.

0
169
- Advertisement -

விஜயகாந்தின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க நடிகை ராதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் விஜயகாந்தின் இறப்பு செய்தி புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

விஜயகாந்த் மறைவு:

பின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ராதாவும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று மாலை தூவி மரியாதை செய்து இருக்கிறார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து, நான் அவருடன் சேர்ந்து படங்களில் நடித்திருக்கிறேன். நடித்து முடித்த பிறகு அவரை நான் நேரடியாக பார்க்கவில்லை.

ராதா பேட்டி:

ஒருநாள் ஊட்டியில் ஒரு படப்பிடிப்பில் பார்த்தேன். அவ்வளவு தான் அவருக்கு பிறந்தநாள் வரும்போது அவரிடமும் பிரேமலதாவிடமும் பேசுவேன். என் பொண்ணு கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க அவங்க வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது விஜயகாந்தை பார்க்க முடியவில்லை. பிரேமலதாவிடம் கொடுத்து விட்டு வந்தேன். பின்பு அவ்ளோ கஷ்டத்திலும் கூட என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி நாள் பிரேமலதா வந்தார்கள்.

-விளம்பரம்-

விஜயகாந்த் குறித்து சொன்னது:

அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கண்டிப்பா அவருடைய ஆசிர்வாதத்துடன் தான் வந்திருப்பாங்க. அது எனக்கு பெரிய விஷயம். அவரை இப்படி வந்து பார்ப்பேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. அவர் செய்திருக்கும் நல்லது நம்ம கூடவே இருக்கும். அவர் நம்முடன் தான் இருக்கிறார் என்று கண் கலங்கியவாறு பேசி விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற அவருடைய குடும்பத்திற்கும் ராதா ஆறுதல் கூறியிருக்கிறார்.

ராதா-விஜயகாந்த் படங்கள்:

90 கால கட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ராதா. பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். தற்போது இவர் முன்பு போல் பெரிதாக சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. மேலும், இவர் விஜயகாந்த் உடன் இணைந்து அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், சிம்மாசனம், சட்டம் ஒரு விளையாட்டு, மீனாட்சி திருவிளையாட்டு உள்ளத்தில் நல்ல உள்ளம், வேங்கையின் மைந்தன் போன்ற பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

Advertisement