பாரதிராஜாவுக்காக பிராத்தனை செய்த ராதிகா – ப்பா அதுவும் எங்க பாருங்க. வைரலாகும் வீடியோ.

0
383
bharathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருக்கிறது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி -நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது.

- Advertisement -

பாரதிராஜா திரைப்பயணம்:-


அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இதனாலேயே இவரை இயக்குனர் இமயம் என்று அழைத்தார்கள். மேலும், தமிழ் சினிமா உலகில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். அதுமட்டும் இல்லாமல் இவருடைய மாணவர்களான பாக்யராஜ், பாண்டிராஜ் முதலான பல பேர் தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனர்களாக இருந்தனர்.

-விளம்பரம்-

பாரதிராஜா வாங்கிய விருதுகள் :-

பின் தாஜ்மஹால் படத்தில் தன்னுடைய மகனை நடிகன் ஆக்கி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. மேலும், பாரதிராஜா இதுவரை ஆறு முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். பல நடிகர்கள் இவர் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட மாட்டோமா? என்று ஏங்கியவர்கள் உண்டு. அந்த அளவிற்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். மேலும், இவருடைய ஹிட் எல்லாம் தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார்.

பாரதிராஜா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் :-

அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார். தற்போது இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா– விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருந்த ராக்கி படத்தில் பாரதிராஜா நடித்து இருந்தார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். படத்தில் பாரதிராஜா வேற லெவல்ல படத்தில் மிரட்டியிருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்னால் திடீரென உடல்நலக் குறைவால் தியாகராஜா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பாரதிராஜாவுக்கு ஓய்வு கண்டிப்பான முறையில் வேண்டுமென்றும் அதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

பாரதிராஜாவுக்காக பிராத்தனை செய்த ராதிகா சரத்குமார் :-

பாரதிராஜாவே சோதித்த மருத்துவர்கள் உடம்பில் உப்பு சத்தத்தின் அளவு, நீர் சத்து அளவும் மிகவும் குறைவாக உள்ளதால் அவருக்கு ஓய்வு தேவை என கூறினார்கள். இந்நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் ” என் வாழ்வில் ஒளி ஏற்றிய இயக்குனர் பாரதிராஜா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன் ” என்றும் மேலும் டூவீட்டர் பதிவில் ” என் இனிய பாரதிராஜா அவர்களே நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரான்ஸில் உள்ள லூர்து சர்ச்சில் எனது சிறப்பு பிரார்த்தனை ” செய்கிறேன் என்றவாறு நடிகை ராதிகா சரத்குமார் பாரதிராஜா விரைவில் உடல் நலம் பெறுவதற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்.

Advertisement