கமன்ட் பகுதியை ஆப் செய்துவிட்டு மறக்குமா நெஞ்சம் வீடியோவை பதிவிட்ட ரஹ்மான் – கடுப்பான ரசிகர்கள்.

0
912
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி குறித்த சர்ச்சை தான். தமிழகம் முழுவதும் இந்த சர்ச்சை பூதாகரம்பாக வெடித்து கொண்டு வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும்.

-விளம்பரம்-

இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள்.

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:

மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி ஞாயிற்று கிழமை நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் அவதிப்பட்டனர். பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:

மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று பலரும் புலம்பி இருக்கின்றனர்.ஏ ஆர் ரகுமான் மிகப்பெரிய ஸ்கேம் செய்துவிட்டார். அவர் மோசடி மன்னன் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் அவரை விமர்சித்து வருகின்றனர். ஆனால், சிலர் ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வருகிறார்கள். இதனை அடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்கள்; இதில் பல பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியின. இது குறித்து சீமான் அவரது கருத்தை கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ரசிகர்களின் கருத்து

அந்த ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த வீடியோவுடன் வெளியிட்டிருந்தார். அதில் அவர் கமென்ட் பகுதியை ஆப் செய்து இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலருக்கும் மனவேதனையை ஏற்படுத்தியது என்ற ஒரு ரசிகர் தனது x தளத்தில் பதிவு செய்திருந்தார். அதற்கு கருத்து தெரிவித்த மற்றொருவர ரகுமான் அவ்வளவு தாழ்வாக இருக்க மாட்டார் என்றும் கச்சேரிக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் instagram பதிவில் நானே பலிகடா ஆகிறேன் என்றும் கூறியிருந்தார் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு கருத்து தெரிவித்து மற்றொருவர் ஆம் நாம் அனைவரும் நான் இந்த நேரத்தில் பலிகடா ஆகினோம் நாம் விழித்திருவோம் என்றும் கூறியிருந்தார்.

Advertisement