விஜய் டிவியில் தற்போது ஹாட் ஜோடிகள் என்றால் அது ராஜா ராணி தொடரின் செம்பா மற்றும் கார்த்திக் ஜோடி தான். இந்த தொடரில் நடித்து வரும் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் நிஜத்திலும் காதலித்து வருகின்றனர்.
இந்த தொடருக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மானஸ் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
இதையும் படியுங்க : முன்னனி நடிகைகளை கூட பின்னுக்கு தள்ளிய ஆல்யா மானஸா.!இதில் அவர் தான் நம்பர் 1.!
சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பாடல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த இரு ஜோடிகளும் அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.
அதே இவர்கள் இருவரும் இணைந்தது அடிக்கடி வெளிநாடுகளுக்கும் பறந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் அமெரிக்காவிற்கு பறந்து அங்குள்ள பல்வேறு சுற்றுல்லா தளங்களை கண்டு களித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.