சர்கார் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைத்துள்ளார் விஜய்.
பெயரிடப்படாத இந்த புதிய படத்தை ‘விஜய் 63’ என்று தான் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதையும் படியுங்க: விஸ்வாசத்திற்கு சம்பளம் பற்றி பேசாத நயன்..!விஜய் 63 க்கு இத்தனை கோடி வேண்டும் என்று கரார்..!
மேலும், இந்த படத்தில் நடிகை நயன்தாரா, விஜய்யுனுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், விவேக், யோகி பாபு போன்றவர்களும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் பிரஸ் மீட் இன்று மாலை நடைபெற இருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் படத்தின் தலைப்பு என்னவென்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும் நடிகர் விஜய் மட்டும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.