ராமர் கோவில் குடமுழுக்கு விழா- ரஜினி குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?

0
420
- Advertisement -

அயோத்தி ராமர் கோவில் விழாவில் ரஜினி கலந்துகொண்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழா குறித்த செய்தி தான் பேசப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமன் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் மேலும், நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதன் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாக இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை காண வருகை தந்துள்ளனர். மேலும், பொதுமக்கள் மட்டுமல்லாது ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் மோகன் லால், ராம் சரண், தனுஷ், ரஜினி உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த குடமுழுக்கு விழாவிற்கு நேரில் சென்று இருக்கின்றனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினிக்கு நேரில் இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் நேற்று சென்னையில் இருந்து கிளம்பி அயோத்திக்கு பயணம் மேற்கொண்டார் ரஜினி. இப்படி ஒரு நிலையில் இன்று காலை அயோத்தி ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார் ரஜினி.

-விளம்பரம்-

அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு அவரை அழைத்து சென்று விஐபி-களுக்காக ஒதுக்கப்பட்ட ஏரியாவில் முன்வரிசையில் அமர வைத்தனர். ஆனால், தன்னுடைய குடும்பத்தினருக்கு முன் வரிசையில் அமர அனுமதி மறுக்கப்பட்டதை கவனித்த ரஜினிகாந்த், அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து பேசிய பின்னர் அவர்களுக்கு விஐபி ஏரியாவில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்தே ரஜினியின் குடும்பத்தார் உள்ளே வந்து ரஜினி அருகே அமர்ந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக அயோத்திக்கு செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ரஜினி ‘ ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்வதற்கு சந்தோஷமாக இருக்கிறது. 500 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே ராமர் கோயிலை திறக்கச் சொல்லி அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதை தற்போது நிறைவேற்றி இருக்கிறார்கள். நாடே இந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement