ராமர் கோவில் குறித்து உங்கள் பார்வை என்ன ? பத்திரிக்கையாளர் கேள்விக்கு ரஜினி அளித்த பதில்.

0
1658
Rajini
- Advertisement -

ராமர் கோவில் குறித்து பத்திரிகையாளர் கேள்விக்கு ரஜினி அளித்திருக்கும் பதில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினி காந்தும் அவரது மனைவி லதாவும் உத்தரப்பிரதேச மாவட்டத்தில் தற்போது உருவாகி வரும் அயோத்தி கோவிலுக்கு நேற்று சென்று சாமி தரிசனம் செய்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை நிறுவனம் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்த  இந்த திரைப்படம் பாக்ஸ் ஆப்பிஸில் நல்ல கலக்சன்களை பெற்று வருகிறது.படம் வெளியாவதற்கு முன் அவர் ஆன்மிக பயணமாக அவர் இமயமலை சென்றார்.  

- Advertisement -

இமய மலையின் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு அதன் பின் ஆன்மிக தளங்களை வழிபட்ட பின் அவர் ஜார்கண்ட் ஆளுநரையும் அதன் பின் உத்திர உத்தரப்பிரதேச ஆளுநரையும் சந்தித்தார். மேலும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வையும் சந்தித்தார். நேற்று முன்தினம் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகியை சந்தித்தார். லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை 9 ஆண்டுகளுக்கு பின் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை முடித்து நேற்று அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்றுளார்.

அங்குள்ள மிகவும் புகழ் பெற்ற ஹனுமான் கிரி கோவிலுக்கும் சென்று சாமியை தரிசனம் செய்தனர். அத்துடன் அங்கு அவர்கள் கோவில் கட்டுமானப் பணிகள் முடியும்வரை மக்கள் வழி பட வைத்துள்ள ‘ராம்லல்லா’ சிலையையும் வழிபட்டனர். சாமி தரிசனம் முடித்த பின் அங்கு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த் செய்தியாளர்களிடம் “இது என்னுடைய நீண்ட நாள் கனவு” என்றும் “நாம் மிகவும் அதிர்ஷ்டசாலி” என்றும் கூறினார்.

-விளம்பரம்-

அப்போது ராமர் கோவில் கட்டபடுவது குறிந்து உங்களுடைய பார்வை என்ன வென்று கேட்ட போது அதற்க்கு வரலாறு என்று பதிலளித்தார். மேலும் கோவில் கட்டி முடித்த பின் அது எவ்வாறு மாற்றப்படும் என்று பாருங்கள் என்றும் பதிலளித்துள்ளார்.அதன் பின்னர் அவர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அதன் பின் அவர் ராஞ்சியில் உள்ள ராஜரப்பா கோயிலுக்குச் சென்று சின்னமஸ்தா தேவியை வணங்கினார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் சின்னமஸ்தா தேவியை வழிபடுவது என்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் அது தற்போது நிறைவேறி உள்ளது என்றும் தெரிவித்தார். இதனை  தொடர்ந்து உத்திரபிரதேச மாநில தலைநகர் லக்னோவிற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் அம்மாநில கவர்னர் ஆனந்திபென் படேலை சந்தித்தார். தொடர்ந்து அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா உடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது  

Advertisement