ரஜினி முருகன் படம் என்னுடைய கதை தான்..!இயக்குனர் சமுத்திரக்கனி புதிய சர்ச்சை..!

0
283
samuthrakani

கடந்த சில நாட்களாக விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் கதை திருட்டு விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் சர்கார் படத்தின் கதை திருட்டு விவகாரம் முடிவுக்கு வந்தது.

Rajinimurugan

இதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி படம் தன்னுடைய கதை என்று குறும்பட இயக்குனர் அன்பு ராஜசேகர் என்பவர் நேற்று(அக்டோபர் 31) குடும்பத்துடன் உண்ணா விரதம் நடத்தினர்.

தொடர்ந்து முருகதாஸ் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கலில் சிக்கி யாரும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் சதுமுத்ரகனியிடம் சர்கார் படத்தின் கதை திருட்டு பற்றி கேள்வி எழுப்பபட்டது.அப்போது பேசிய அவர், அனைவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனை தோன்றுவது தவறு ஒன்றும் இல்லை.

Rajinimurugan

நான் ஒரு நான்கு வருடங்களுக்கு முன்னர் சிவகார்திகேயனிடம் ஒரு கதை ஒன்றை கூறி இருந்தேன். கதையை கேட்டு முடித்ததும் நடிகர் சிவகார்த்திகேயன்’அண்ணே நீங்க சொன்ன பாதி கதை ரஜினி முருகன் கதை போலவே உள்ளது. உங்க படத்தில் பாட்டி முக்கிய கதாபாத்திரம் என்றால் ரஜினி முருகானில் தாத்தா முக்கிய கதாபாத்திரம்.

உங்கள் கதையில் நீங்கள் தம்பி ராமையாவிற்கு வைத்திருக்கும் கதாபாத்திரம் தான் உங்களை ரஜினி முருகனின் நடிக்க வைப்பதாக இருக்கிறது’ என்றார். இதனை கேட்டதும் எனக்கு பெரிதாக ஆச்சர்யமொன்றும் தோன்றவில்லை. அந்த இயக்குனரும் மதுரகாரார் தான் நானும் மதுரகாரார் தான். நான் இதே கதையை ஒரு ஐந்து வருடம் கழித்து எடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். எனவே, அனைவருக்கும் ஒரே சிந்தனை காரணமாக ஒரே கதை தோன்றலாம் எனவே, யாரும் கதை திருட்டு என்று தவறாக பேசாமல் பேசிக்கொண்டு சமரசமாக வீட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சமுத்திரக்கனி.