அவர் ஒரு குடிகாரன், போதாத குறைக்கு அந்த டார்ச்சர் வேற. இரண்டே ஆண்டில் கணவரை பிரிந்தது குறித்து ராஜ்கிரண் மகள்.

0
687
- Advertisement -

ராஜ்கிரண் மகள் பிரியா- முனீஸ்ராஜா இருவரும் பிரிந்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ராஜ்கிரன். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாக இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து இருந்தது சோசியல் மீடியாவில் சர்ச்சையாக பேசப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் சம்பந்தம் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் சீரியலில் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கியிருந்தார். அதோடு நடிகர் சண்முகராஜனுடன் பிறந்த தம்பி தான் முனீஸ்ராஜா. நாதஸ்வரம் சீரியலில் இவருடைய பேச்சும், ஸ்டைலும் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

- Advertisement -

முனீஸ்ராஜா குறித்த தகவல்:

இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், பெரிய அளவில் இவருக்கு சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை அடுத்து சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராக போட்டியிட்டு முனீஸ்ராஜா தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

முனீஸ்ராஜா- ஜீனத் திருமணம்:

இருந்தாலும், இவர்கள் காதலித்துக் கொண்டு தான் வந்தார்கள். பின் இவர்கள் பெற்றோர்களை மீறி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டார்கள். முனீஸ்ராஜா வீட்டில் இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். அதே நேரம் ராஜ்கிரன் அவரின் மனைவி மட்டும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதனை ராஜ்கிரனின் மனைவி பத்மஜா என்கிற கதீஜா ராஜ்கிரன் முசிறி காவல் நிலையத்தில் முனீஸ்ராஜா- ப்ரியா மீது புகார் கொடுத்திருக்கிறார். அதில் அவர், முனீஸ்ராஜா பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தனது 7 சவரன் நகை மற்றும் குடும்ப தாலியை பிரியா எடுத்து சென்று விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

முனீஸ் ராஜா-ப்ரியா விவகாரம்:

இதையடுத்து காவல் நிலையத்தில் ஆஜரான பிரியா ‘என்னுடைய நகைகள் அவர்களுடைய வீட்டில் இருக்கிறது. அதைக் கேட்டதற்கு அவர் பொய்யான புகார் அளித்திருக்கிறார். என் மீது மட்டுமில்லாமல் என் தந்தை, சகோதரர், கணவர் மீதும் புகார் அளித்திருக்கிறார். எனக்கு என் அப்பா மற்றும் தாத்தா கொடுத்த நகை வேண்டும் என்றும் ராஜ்கிரண் குறித்து தவறாக கூறி புலம்பி இருந்தார். இப்படி இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்த நிலையில் ராஜ்கிரண், பிரியா என்னுடைய மகள் கிடையாது. வளர்ப்பு மகள் தான். அந்த சின்னத்திரை நடிகர் என்னுடைய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.

பிரியா பேட்டி:

என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதனை செய்திருகிறார். எனவே என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி இருந்தார். இப்படி இருவருமே மாறி மாறி பேட்டி அளித்திருந்தார்கள். இந்த நிலையில் முனீஸ் ராஜாவை விட்டு ப்ரியா பிரிந்து தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் விவாகரத்துக்கான காரணம் குறித்து ராஜ்கிரண் மகள் கூறியுள்ளார.

Advertisement