நேற்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடி நடிகை ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமாருக்கு வித்தியாசமான பரிசளித்து அசத்தியுள்ளார். 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியாக கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராதிகா. பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளாக இவர், தொடர்ந்து, ரஜினிகாந்த் கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார். அதோடு ராதிகா ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சீரியல்களை தயாரித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சன் தொலைக்காட்சியில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி, செல்வி, அரசி, சித்தி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார்.
மேலும், இவர் இயக்கிய சீரியல்கள் எல்லாம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்.வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். சமீபத்தில் ராதிகாவின் தயாரிப்பு மூலம் விஜய் டிவியில் “கிழக்கு வாசல்” என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 1985-ம் ஆண்டு நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்ட ராதிகா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன்பிறகு 1990-ம் ஆண்டு ரிச்சர்ட் ஹார்ட்லி என்பரை திருமணம் செய்துகொண்ட நிலையில், 1992-ம் ஆண்டு அவரையும் பிடித்தார். அதன்பின்னர் 9 வருடங்களுக்கு பிறகு கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
இந்த தம்பதிக்கு ராகுல் என்ற ஒரு மகன் உள்ள நிலையில், சரத்குமார் ராதிகா தம்பதி இன்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டடி உள்ளனர் இந்த பயணத்தில் விதிதான் நம்மை இணைத்துள்ளது. இரண்டு செடி ஒரு பானையில் வேரை தேடி ஒன்றாக வளரும் என்ற சீன பழமொழியை பதிவிட்டு தனது கணவர் சரத்குமாருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். ராதிகாவின் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2ல் ராதிகா நடித்து இருக்கிறார். இதனை அடுத்தும் சில படங்களில் ராதிகா கமிட்டாகி இருக்கிறார். இப்படி இவர் சீரியல், சினிமா, தயாரிப்பு என்று சினிமா துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இன்னும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து தான் வருகிறது. அதே போல சரத்குமாரும் சமீப காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.