ரஜினியை கண்டு வியக்கும் பேர் கிரில்ஸ். வெளியான மேன் vs வைல்ட்டின் புதிய வீடியோ.

0
2286
manvswild
- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். காடுகளில் தனியாக மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் கையில் கிடைத்த பொருட்களை வைத்தும் காடுகளில் கிடைத்ததை உண்டு எப்படி உயிர் வாழ வேண்டும் என்ற யுத்தியை இந்த நிகழ்ச்சியில் சொல்லி தருகிறார்கள். அதே போல மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் உள்ள காடுகளில் எடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

The wait is over! This adrenaline pumping trailer gives you a glimpse of Superstar Rajinikanth’s electrifying TV debut….

Superstar Rajinikanth Fans ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಮಾರ್ಚ್ 19, 2020

தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் பிரதமரான ஒபாமா கூட கலந்து கொண்டார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் கூட இந்திய பிரதமர் மோடி அவர்கள் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பேர் கிரில்ஸ் உடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : 3000 வாங்கியவருக்கு 80000. நிர்பயா வழக்கு மிருகங்களை தூக்கிலிட்ட இவர் யார் தெரியுமா ?

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு “தர்பார்” படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியான உடன் ரஜினி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு மைசூர் மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்றது.

-விளம்பரம்-

மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியின் ஷூட்டிங் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு லேசாக காயம் ஏற்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வந்தது. ஆனால், அது வெறும் வதந்தி என்று பின்னர் தெரியவந்தது. மேலும், இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23 ஆம் தேதி அதாவது திங்கள் கிழமை இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Image result for man vs wild rajinikanth

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேர் கிரில்ஸ், ரஜினியிடம் ‘நீங்கள் 18, 19 வயதில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு ரஜினி, நான் கர்நாடகாவில் பஸ் கன்டக்டராக இருந்து வந்தேன் என்று கூறுகிறார் ரஜினி. மேலும், இந்த வயதிலும் ரஜினி இப்படி ஆக்டிவாக இருப்பதை கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளார் பேர் கிரில்ஸ்.

Advertisement