கீர்த்தி சுரேஷ், விஜய் சேதுபதி நடிக்க இருந்த கரகாட்டக்காரன் 2 – நடிக்க மறுத்துள்ள ராமராஜன் – கங்கையமரன் சொன்ன காரணம்.

0
356
karakattakaarn
- Advertisement -

கரகாட்டக்காரன் 2 குறித்து கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த போது அரை ட்ரவுஸரில் இருந்து படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர் ராமராஜன். இவர் 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன். எத்தனை படங்களில் ராமராஜன் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன் படம் இன்று மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

கரகாட்டக்காரன் படம்:

இந்த படம் 1989ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, காந்திமதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படம் வசூல் மழையை குவித்து இருந்தது என்று சொல்லலாம். இதனை அடுத்து எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, பொண்ணுக்கு ஏத்த புருஷன், வில்லுப்பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன் என ராமராஜனை வைத்து கங்கை அமரன் இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

சாமானியன் படம்:

அதற்கு பின் ராமராஜன் அரசியலில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர் சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஐந்து மொழிகளில் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

கங்கை அமரன் அளித்த பேட்டி:

இதனால் ரசிகர்கள் பலரும் ராமராஜன் வருகையை எதிர்பார்த்து போஸ்டரை சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இந்நிலையில் கங்கை அமரன் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர், சாமானியன் படத்தின் டீசரை பார்த்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. அதனால் தான் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் நானும் ராமராஜனும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.

கரகாட்டக்காரன் 2 குறித்து சொன்னது:

அவர் மீண்டும் நடிப்பதில் ரொம்ப சந்தோஷம். வயதுக்கு தகுந்த மாதிரியான கதாபாத்திரத்தை நடிப்பது நல்லது. அதேபோல் கரகாட்டக்காரன் 2 எடுக்க கதை எல்லாமே ரெடி பண்ணிட்டோம். கீர்த்தி சுரேஷ், ராமராஜன் பொண்ணாகவும், விஜய் சேதுபதி பக்கத்து ஊர் டான்சர் என கதை அமைத்திருந்தோம். ஆனால் ,ராமராஜன் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றதால் அந்த திட்டத்தையே கைவிட்டோம் என்று கூறியிருந்தார்.

Advertisement