இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் தரும் நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுதலும் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த சிறு சலசலப்புகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் சித்தியாகும்.