இன்று மகர ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளில் நிதானமாக செயல்படுவது முன்னேற்றத்தைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.