மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் தன்னம்பிக்கை உயரும் நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதோடு, புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நிதிநிலை சீராக இருப்பதால் சேமிப்பை அதிகரிக்க வழிவகை செய்வீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.