கலர் கலர் பெண்ட், டி-ஷர்ட் என்று இருந்த தேவா பின்னர் ஒயிட் அண்ட் ஒயிட்டுக்கு மாற காரணமா இருந்த அந்த ஒரு கமண்ட்.

0
277
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் தேவா. இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் வேலூர் மாவட்டம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் சினிமா துறையில் கடந்த 20 வருடங்களாக பயணித்து வருகிறார்.இசையமைப்பாளர் தேவா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கானா தான். அந்த அளவுக்கு இவருடைய கானா பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இவருக்கு என்று ஓரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

ஆரம்ப காலங்களில் இசை கலைஞர்களான காமேஸ், ராஜாமணி ஆகியோரிடம் இவர் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அவர்களிடம் இருந்து ஹார்மோனியம் வாசிப்பதையும் கற்றுக் கொண்டார்.அதன் பின்னர் இசை கலைஞர்களான சந்திர மௌலி, எஸ் வி சேகர் உள்ளிட்ட பலரிடமும் ஹார்மோனியம் வாசிப்பாளராக தேவா பணியாற்றி இருந்தார். பின் மேற்கத்திய இசையை மாஸ்டர் தன்ராஜ் இடம் இருந்து தேவா கற்றுக்கொண்டார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவர் சில காலம் தூர்தர்ஷனில் அலுவலக பணியாளராக பணியாற்றி இருந்தார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் இவர் அதிகம் பக்தி பாடல்களில் கவனம் செலுத்தினார். இதுவரை இவர் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இசையமைத்திருக்கிறார். அப்படி தான் பக்திப் பாடல் பதிவிற்காக கர்நாடக இசை மேதையான பாலமுரளி கிருஷ்ணாவை சந்தித்து இருக்கிறார் தேவா.

மேலும் தேவாவின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடுவதாக இருந்தது. அந்த சமயத்தில் தற்போது போல இல்லாமல் தேவா ஜீன்ஸ் டீ சர்ட் என்று படு ஸ்டைலாக உடை அணியும் பழக்கத்தை கொண்டிருந்தார். அப்படி படு ஸ்டைலாக உடை அணிந்து கொண்டு ஸ்டுடியோ வாசலில் அமர்ந்து புகை பிடித்துகொண்டிருந்துள்ளார் தேவா. அப்போது அங்கே வந்த பாலமுரளி கிருஷ்ணா அது தேவா என்று அறியாமல் அவரை கடந்து சென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

பின்னர் உள்ளே சென்ற பாலமுரளி கிருஷ்ணா உள்ளே இருந்தவர்களிடம் இசையமைப்பாளர் வந்தாச்சா என்று கேட்டுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் வெளியில் அமர்ந்திருக்கிறாரே நீங்கள் பார்க்கவில்லையா என்று கூறியுள்ளார். இதனால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்த பாலமுரளி கிருஷ்ணா ‘பார்ப்பதற்கு ஆள் இப்படி இருக்கிறார் இவரா பக்தி பாடலுக்கு இசையமைப்பாளர் என்று சந்தேகத்துடன் இருந்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தேவாவும் ஒரு பக்தி பாடலுக்கான டியூனை போட்டு காண்பித்திருக்கிறார் அந்த டியூன் பால முரளி கிருஷ்ணாவிற்கு பிடித்துப் போக இது என்ன ராகம் என்று தேவாவிடம் கேட்டிருக்கிறார். இதற்கு தேவா தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். பின்னர் பாடல் ரெக்கார்டிங் முடிவடைந்த பின் தேவா அழைத்து பாலமுரளி கிருஷ்ணா ‘நான் சொல்வதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உங்களில் இந்த தோற்றம் உங்களுக்கு பொருத்தமாகவே இல்லை. எனவே வெள்ளை வேட்டி சட்டை நெற்றியில் விபூதி இருந்தால் உங்களின் தோற்றம் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்ன அன்று இரவே தேவா அடுத்த நாளே அவர் சொன்னதைப் போலவே பால முரளி கிருஷ்ணாவின் முன் போய் நின்று இருக்கிறார். இதனை கண்ட அவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். வெள்ளை வேட்டி சட்டை தேவாவிற்கும் பிடித்துப் போக அன்றிலிருந்து வெள்ளை உடைகளை அணிவதை வழக்கமாக வைத்து வந்திருக்கிறார்.

Advertisement