எந்த நீல சட்டைக்காகவும் படம் எடுக்கல- ஆர்.ஜே.பாலாஜியின் அதிரடி பதில்- வைரலாகும் வீடியோ

0
317
- Advertisement -

ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டு உள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். பின் ரேடியோ ஜாக்கியாக ஆர் ஜே பாலாஜி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்குப் பிறகு பாலாஜி சென்னையில் உள்ள big-fm-ல் வேலைக்கு சேர்ந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் ஆர் ஜே பாலாஜி சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து இருந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார்.

- Advertisement -

ஆர் ஜே பாலாஜி நடித்த படங்கள்:

வெறும் அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இதனை எடுக்காமல் கொஞ்சம் சமூக கருத்தினையும் புகட்டி இருந்தார் பாலாஜி. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார்.

Rjbalaji

ஹிந்தி ரீமேக் படம்:

இதை தொடர்ந்து இவர் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’. இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

வீட்ல விசேஷம் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து இருக்கின்றனர். இந்த படம் சமீபத்தில் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. வித்தியாசமான கதை, கலகலப்பான டயலாக் என மக்கள் அனைவரும் மக்களை ஈர்க்கும் வண்ணம் இந்த படம் அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படமும் மல்டிவெர்ஸ் அல்லது கிராஸ் ஓவர் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஆர்.ஜே.பாலாஜி பதிவிட்ட வீடியோ:

இந்த நிலையில் வழக்கம் போல் இந்த படத்தை தன்னுடைய செயலில் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார். இதற்கு ஆர் ஜே பாலாஜி வீடியோ பதிவிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவில், பல திரையரங்கு உரிமையாளர்கள் வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பை பற்றி சிறப்பாக பேசியிருக்கின்றனர். அதன்பிறகு ஆர் ஜே பாலாஜி இந்த படம் யாருக்காக எடுத்தோமா அவர்களுக்கு பிடித்தால் மட்டும் போதும். எந்த நீல சட்டைக்கும் படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement