அஜித் என்னை அழ வைத்தார் வைத்தார்.! விஜய் 63 படமா ? ரகிசயம் சொல்லும் ரோபோவின் மகள்.!

0
4432
- Advertisement -

மேடை கலைஞராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நுழைந்து தற்போது சினிமாவில் ஒரு முக்கிய காமெடி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர், விஜய்யுடன் ‘புலி’ படத்திலும் அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவரது மகள் தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for robo shankar family

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், நடிகர் கதிர், விவேக், யோகிபாபு, என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தில் ரோபோ ஷங்கர் என் மகளும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கயிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரோபோ ஷங்கரின் மகள், விஜய் மற்றும் அஜித் குறித்து பேசியுள்ளார். விஜய் 63 குறித்து பேசிய அவர், நான் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கப் போகிறேன் என்று அறிந்ததும் அதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்தப் படத்தின் கதை என்ன, அதில் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பது எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், அந்த படத்தில் நான் நடிப்பது மட்டும் உறுதி என்று கூறியுள்ளார்.

Image result for robo shankar family

மேலும் அஜித் சந்தித்ததை குறித்து பேசுகையில், விஸ்வாசம் படத்தின் போது அஜித் சாரை பார்க்க நாங்கள் குடும்பத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இருந்தோம். அப்போது அஜித் உன்னை முதலில் பார்த்ததும், அம்மா அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார் அதைக் கேட்டதும் எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மேலும் நாங்கள் படப்பிடிப்பில் அவரை சந்திக்க நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்ததால் அங்கே அவருக்காக காத்துக் கொண்டிருந்த அனைவரிடமும் ‘மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள் நான் சீக்கிரம் வந்து விடுகிறேன்’ என்று கூறி அனுப்பினார். அஜித் அதை பார்த்ததும் எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement