‘நடன கலைஞராக கேப்டனுடன் வேலை பார்த்த படம் இது’ – ரோபோ ஷங்கர் மனைவி வெளியிட்ட அறிய புகைப்படம்.

0
827
- Advertisement -

கேப்டன் இறந்து 4 நாட்கள் ஆனாலும் அவர் குறித்த செய்திகள் இன்னும் சமூக வலைத்தளத்தில் வந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். பின் கடந்த மாதம் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து பூரணமாக குணமடைந்து விட்டதாக விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார்.

-விளம்பரம்-

பின் சில தினங்களுக்கு முன் காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது.மேலும், விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.. லட்சக்கணக்கான மக்கள், தொமேலும் ண்டர்கள், ரசிகர்கள் நேரில் சென்று விஜயகாந்தின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -

அதே போல கேப்டன் இறப்பிற்கு செல்ல முடியாத பலர் அவரது இறப்பிற்கு சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, கேப்டன் படத்தில் பணியாற்றிய போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘நான் நடன கலைஞராக கேப்டனுடன் வேலை பார்த்த படம் வீரம் விளைந்த மண்ணு. எனக்கு இருந்த ஒரு ஞாபகப் புகைப்படம். மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த் என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலாமானவர் ரோபோ ஷங்கர். அப்போது பாடி பில்டராக இருந்த அவர் மேடை காமெடியனாக அறிமுகமானர் அதன் பின்னர் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும் இருந்து வந்தார். பின்னர் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மகள் இந்திரஜா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும், ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா ஏற்கனவே தில் படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான கன்னி மாடம் என்ற படத்திலும் பிரியங்கா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சிறந்த படமாக இருந்த போதிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

Advertisement