மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத நடிகர்களில் மயில்சாமி ஒருவர். இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். இவர் கன்னிராசி படத்தில் டெலிவரி பாய் என்ற வேடத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆர் ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் மயில்சாமி நடித்திருந்தார்.
மயில்சாமி திரைப்பயணம்:
மேலும், இவர் நடிகராக மட்டுமில்லாமல் தீவிர அரசியல்வாதியும் ஆவர். இப்படி இருக்கும் சில மாதங்களுக்கு முன் சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது மயில்சாமிக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
மயில்சாமி இறப்பு:
அதோடு மயில்சாமி தீவிர சிவ பக்தர். இவர் சிவராத்ரி அன்று மாரடைப்பால் இறந்தார். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவரின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர் சினிமாவை தாண்டியும் பல சமூக சேவைகளை செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் உதவி என்று யார் கேட்டாலுமே இல்லை என்று சொல்லாமல் உதவி செய்து இருக்கிறார். இவரிடம் பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.
மயில்சாமி மகன்கள்:
இது குறித்து பொதுமக்கள் பலருமே கூறியிருக்கிறார்கள். மேலும், நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் சினிமாவில் எப்படியாவது பிரபலமான நடிகராக்க வேண்டும் என்று மயில்சாமி ஆசைப்பட்டார். அந்த வகையில் அன்பு அவர்கள் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த அல்டி என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதற்கு பிறகு இவர் 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை விடவில்லை. இருந்தும் இவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்.
மயில்சாமி மகன் நடிக்கும் சீரியல்:
இந்த நிலையில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் படங்களில் கிடைத்த ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது இவர் சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் தங்கமகள் என்ற சீரியல் நடிக்கிறார். இந்த சீரியலில் யுவனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பொண்ணு சீரியலில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் தொடர்புடைய படப்பிடிப்புகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது.