அதிமுக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு என்ன விருந்து தெரியுமா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அப்டேட்.   

0
1485
- Advertisement -

மதுரையில் அதிமுக நடத்துள்ள பிரமாண்ட மாநாட்டிற்கு கலந்து கொள்ளவிருக்கும் அதிமுக தொண்டர்களுக்காக மூன்று வேலையும் அறுசுவை உணவு வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் தொண்டர்கள் யார் அதிமுக இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு இருப்பதாக அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர். இந்த மாநாட்டின் மூலம் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென்  மாவட்டங்களை மையமாக வைத்து நடத்தப்படும் மாநாட்டின் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் யாருடைய பக்கம் நிற்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும் எனவும் அரசியல் தலைவர்கள் தெறிக்கின்றன. மதுரையில் நடத்தபடும் மாநாட்டிக்காக அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் தொண்டர்கள் தான் பக்கம் தான் இருப்பதாக காட்டிக்கொள்ள கொங்கு மண்டலங்களில் அதாவது எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி அதற்க்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமி நடத்த உள்ள மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில். அதிமுக தொண்டர்கள் தங்குவதற்கான அறைகள், உணவுகள் ஏற்பாடு செய்ய பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ஒருங்கிணைத்த மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அதிமுக மாநாட்டில் திரளான தொண்டைகளை கலந்துகொள்ள வைப்பது கூறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். தொண்டர்களை வரவைப்பதர்க்கான கார், வேன்,பேருந்துகளை முன்பதிவு செய்து வருகின்றன எனவும் மேலும் 2 சிறப்பு ரயில்களை மத்திய அரசிடம் கேட்டு இருப்பதாகவும் வரும் அனைத்து தொண்டர்களுக்கும் 3 வேலையும் உணவு வழங்கப்படும் என்றும் அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர்.  

ஆர்.பி உதயகுமார் கூறியது:

அதிமுக மாநாட்டின் இறுதிகட்ட பணிகளை நேற்று ஆய்வு செய்ய வந்த துணை பொது செயலாளர் கேபி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா செல்லூர் கே.ராஜூ, காமராஜ் ஆகியோர் அங்கு ஆய்வுகளை செய்தனர்.மூன்று இடங்களில் அமைந்துள்ள சமையல் கூடங்களை பார்வையிட்டனர். நிகழ்ச்சியை தொலை துரத்தில் இருந்து காணும் வகையில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட உள்ளது.உணவு குறித்து கூறுகையில் மாநாடு அன்று வரும் தொண்டர்கள் அனைவருக்கும் 3 வேலையும் உணவுகள் வழங்கப்படும் என்றார்.

-விளம்பரம்-

காலையில் இட்லி, வடை, பொங்கல், உப்புமா, வழங்கப்படும். மதியம் வெஜிடபிள் பிரியாணி, பொரியல், அப்பளம் ,தக்காளி சாதம், தயிர் சாதம், புளிசாதம், காய்கறி கூட்டு, வழங்கப்படும். 300 மி.லி. அளவு கொண்ட 10 லட்சம் குடிநீர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மாநாட்டிற்கு வருவோர் நான்கு திசைகளிலும் இருந்து பந்தலுக்கு வர வழி செய்யப்பட்டுள்ளது. அங்கங்கே குடிநீர் சுத்திகரிப்பு பொருத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 150 இடங்களில் மொபைல் கழிவறைகளும் ஏற்பாடு செய்யபட்டுளதாக தெரிவித்தார்.   

Advertisement