யார் இந்த பிரியாணி யுவராஜ்..? முழு விவரம் இதோ

0
323
Yuvaraj

திமுக தலைவர் கலைஞரோ உடல் நலமின்றி மருத்துவமனையில் உள்ளார். இதை சாக்காக வைத்து நியாயமாக வணிகம் செய்யும் வணிகர்களிடம் கடையை அடைக்க கூறியும் மாமூல் கேட்டும் சில கும்பல் என தகராறு செய்யும் சிலர் சேலம் மாநகராட்சி விருகம்பாக்கம் “R.R அன்பு பிரியாணி” கடையில் இலவசமாக பிரியாணி கேட்டு பாக்ஸிங் சண்டை போடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த காட்சியில் உள்ளது விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் என்றும், அவரது தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் தான் பிரியாணிக்காக சண்டை போட்டுள்ள இவரது வீடியோ பிரியாணி யுவராஜ் என்ற பெயரில் பரவி வருகிறது.

யார் இந்த பிரியாணி யுவராஜ்?

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் யுவராஜ். பச்சையப்பன் கல்லூரியில் தான் படித்துள்ளார். கல்லூரி படிக்கும் காலத்திலேயே உள்ளுர் ரவுடிகளுடன் நடப்பு ஏற்படுத்திக்கொண்டு, சில காலம் ஜிம் வைத்து நடத்தி வந்துள்ளார். ஜிம்மில் பயிற்சி செய்யும் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு, அவ்வப்போது தகராறில் ஈடுபடுவது, சந்தர்ப்பம் கிடைத்த இடங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வது என்று பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார் யுவராஜ் .அது போக சில நாட்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் பயிற்சி எடுத்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற கொலை வழக்கு நிலுவையில் உள்ள ரவுடி ஒருவர் இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரோடு சில காலம் பிரியாணி யுவராஜ் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்துள்ளார்.மேலும், கோடம்பாக்கம் ஸ்ரீ நடத்தி வரும் தமிழ்நாடு இந்து மகாசபா என்ற அமைப்பில் சில வருடங்கள் இருந்துள்ளார் பிரியாணி யுவராஜ்.

மேலும், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர் ஜிகே வாசனோடு சில நாட்கள் இருந்த போது பிரியாணி யுவராஜும் ஜிகே வாசனோடு சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் கோடம்பாக்கம் ஸ்ரீயை போலீஸ் நெருக்கியது. 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, கோடம்பாக்கம் ஸ்ரீயோடு இருந்தால், பெரிய அளவில் ரவுடித்தனம் செய்ய முடியாது என்று திமுகவில் சேர்ந்த பிரியாணி யுவராஜ் சில கட்டப்பஞ்சாயத்து வேலைககளையும் தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில்தான், நான்கைந்து வாகனங்களில் சக அடியாட்களோடு கடடைந் ஞாயிறுகிழமை இரவு காவேரி மருத்துவமனை சென்று விட்டு திரும்பி, விருகம்பாக்கத்தில் பிரியாணி கேட்டு தகராறு செய்துள்ளார் இந்த பிரியாணி யுவராஜ்.இதன் காரணமாக பிரியாணி யுவராஜை திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக திமுக கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது