சம்பளம் கேட்டா குடுக்க மாட்றாங்க, ரூம் ரெண்ட் கூட குடுக்க முடியல – புலம்பும் ருத்ரன் பட கலைஞர்கள்

0
1418
Lawrence
- Advertisement -

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட நடன கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் மோசடி செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ருத்ரன். இந்த படத்தை 5 ஸ்டார் தயாரிப்பாளர் கதிரேசன் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ருத்ரன் படம்:

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் ருத்ரன் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் நடன கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற புகார் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ருத்ரன் படத்தில் நடன கலைஞராக பணியாற்றியவர் ராஜ்.

ராஜ் அளித்த புகார்:

தற்போது இவர் தனக்கான சம்பளம் கொடுக்கவில்லை என்று வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பது, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்திருந்த ருத்ரன் படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்காக துணை நடிகர்கள் மட்டும் ஆடல் கலைஞர்களை நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதன் பின்பு அந்த காட்சியில் பணியாற்ற அனைவருக்கும் பல நாட்கள் ஆகியும் சம்பளம் தரவில்லை. சம்பளம் பாக்கி குறித்து நான் பெப்சி உறுப்பினர் ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டிருந்தேன். இரண்டு நாட்களில் சம்பளம் வந்து சேரும் என்று அவர் சொன்னார்.

-விளம்பரம்-

ருத்ரன் பட மேனேஜர் சொன்னது:

ஆனால், அதற்கு பிறகும் சம்பளம் வரவில்லை. இதனை அடுத்து திரைப்படத்தின் மேனேஜரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் என்னிடம் பத்து பைசா கூட உங்களுக்கு தர முடியாது என்று அவதூறாக பேசினார். இது குறித்து நான் பலமுறை பெப்சி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். ஆனால், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ருத்ரன் திரைப்படத்தின் மேனேஜரிடம் கேட்டபோது அவரும் சரியான பதில் கொடுக்கவில்லை. ராகவா லாரன்ஸ் அலுவலகத்திற்கு சென்று உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

ராஜ் வைத்த கோரிக்கை:

பத்து நாட்கள் கடுமையாக உழைத்து நடனம் ஆடிய கலைஞர்களுக்கு சம்பளம் வாங்கி தராமல் மேனேஜர், ஸ்ரீதர் ஏமாற்றி வருகிறார்கள். ஆகவே, அந்த திரைப்படத்தின் மேனேஜர், ஸ்ரீதர் ஆகியோர் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுத்து எங்களுடைய சம்பள பாக்கியத்தை தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படி நடன கலைஞர் ராஜ் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement