ஜெயிலர் திரைப்படத்திற்கு எதிராக பிரபல இயக்குனர் பதாகை ஏந்தி போராட்டம். இதான் காரணம்.

0
1389
Jailer
- Advertisement -

ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு எதிராக மலையாளத்தில் போராட்டம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக ரஜினி நடித்த படம் அண்ணாத்த.

-விளம்பரம்-

இது அண்ணன்-தங்கை பாச கதையை மையாக கொண்ட படம். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இதை அடுத்து ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.

இசை வெளியீட்டு விழா:

சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதேபோல் கடந்த வாரம் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மாஸாக பேசியிருந்தார். தற்போது இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஆக்ஷனில் இறங்கும் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜெயிலர் படம் குறித்த சர்ச்சை:

இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு எதிராக மலையாளத்தில் நடந்திருக்கும் போராட்டம் தற்பொழுது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்திருக்கிறது. அதாவது, மலையாளத்தில் ஜெயிலர் என்ற அதே தலைப்பில் ஷகீர் மடத்தில் என்ற இயக்குனர் படம் எடுத்திருக்கிறார். இந்த படமும் வருகிற பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கும், தன்னுடைய படத்திற்கும் பிரச்சனை வராமல் இருப்பதற்கு மலையாளத்தில் மட்டும் தலைப்பை மாற்றக் கோரி சன் பிக்சர்ஸ் நிறுவனம் இடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கேரளாவில் நடந்த போராட்டம்:

அதோடு இவர் படத்தின் தலைப்பை 2021 ஆம் ஆண்டு கேரள திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் கேரள பிலிம் சேம்பர் அலுவலகம் முன்பு ஷகீர் மடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனை அடுத்து இவர் கூறியிருப்பது, மலையாள சினிமாவை காப்பாற்றுங்கள். ரஜினியின் ஜெயிலர் படமும் என்னுடைய படமும் ஒரே தேதியில் வெளியாகிறது. இதனால் திரையரங்கில் என்னுடைய படத்தை நிராகரிக்கிறார்கள். கேரளாவில் தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மலையாள படம் மூச்சு திணறுகிறது. மலையாள படத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று போராட்டம் செய்திருக்கிறார்.

Advertisement